![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvoceNOvn7D1GoE8lgpS-dQyPuQ4l2WTBcWAYPTCNQ1V0GD2KmrPL7dQ_CZUHUrxccCF3OVaL7NnYePxV2BHXP3EAmQKPotJ92rlEJakAwsAhfMo2oYjdfCu2gUmCufH_cWXcfFHL8K0OC/s400/balakumaran.jpg)
இந்தியாவில் உள்ள சகோதர-சகோதரிகளிடையே எமக்கு உள்ள கலாசார தொடர்பின் அடிப்படையில் இந்திய அரசு எங்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கழகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியாவின் நலனே எங்கள் நலன். தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல. எனவே இலங்கைப் பிரச்னையில் இந்தியா தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்றார் அவர்.
இலங்கைப் பிரச்னையை இந்தியா தனது கோணத்திலிருந்து அணுகுவது வருத்தமளிக்கிறது. சர்வதேச சமூக ஒத்துழைப்புடன்தான் இலங்கைத் தமிழர் போராட்டம் வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
தனி ஈழத்துக்காகத்தான் விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இருப்பினும் மாற்று திட்டங்களையும் பரிசீலிக்கத் தயாராக உள்ளனர் என்றார் பாலகுமாரன்.
Comments