ஈழத்தமிழர்களின் மனதைநோகடிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி

தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மீது கலைஞரின் அரசாஙக்ம் விதித்துள்ள சொத்துத் தடையை, மலையக மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.

இது குறித்து, தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல்கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கும், மலையகமக்கள் முன்னணியின் தலைவர் - அமைச்சர் பெ.சந்திரசேகரன்,

தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் மீது கலைஞர்விதித்துள்ள சொத்துத் தடை, புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை திகிலடைய வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் மீது,இற்றைவரைக்கும் எவ்விதமான சொத்துத் தடைகளையும் மேற்குலகஅரசுகள் விதிக்காத நிலையில்,

ஷமரத்திலிருந்து வீழ்ந்தவனைமாடேறி மிதித்த கதை போன்று, ஈழத்தமிழர்களின் மனதைநோகடிக்கும் வகையில் கலைஞர் நடந்து கொள்வதாகவும்,அமைச்சர் பெ.சந்திரசேகரன் அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீது கலைஞர் முத்துவேல் கருணாநிதி விதித்துள்ளசொத்துத் தடை, உலகத் தமிழர்களின் தலைவன் என்ற நிலையில்இருந்து

அவரைத் தரமிறக்கி, அருவருப்புக்கும், தலைகுனிவுக்கும்உரிய ஒருவராக,

அனைத்துத் தமிழர்களும் கருதும் நிலைக்குவழிகோலும் என்றும, அமைச்சர் பெ.சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.

Comments