கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நாளை சனிக்கிழமை (05.07.08) பிற்பகல் 2:00 மணிக்கு பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதோ டவுண்ஸ்வியூ பிரமாண்ட பூங்காவின் அமைவிடப்படம்
ஐந்து இலட்சம் மக்கள் கலந்து கொள்ளக்கூடிய மிக மிகப் பிரமாண்டத் திடலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஊர்திகளை நிறுத்துவதற்கான தரிப்படங்கள் அங்கே தாரளமாக உள்ளன. எனவே உங்கள் ஊர்திகளிலேயே நீங்கள் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வரமுடியும். (401 எண் நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்கள் கீல் அல்லது அலன் சாலைகளில் வந்து செப்பேட்டு சாலையை அடையமுடியும்.)
அதேபோல ரொறன்ரோவின் போக்குவரத்துச் சபையின்(ரி.ரி.சி) பேரூந்துகள் மற்றும் தொடரூந்துகளிலிலும் குறித்த இடத்தை வந்தடைய முடியும். (பச்சைநிறச் சேவையான)கெனடி - கிப்பிளிங் தொடரூந்தில் பயணத்தைத் தொடங்குபவர்கள் சென்.ஜோர்ஜ் தொடரூந்து நிலையத்தில் இறங்கி (மஞ்சள்நிற சேவையான) யங்-யுனிவேர்சிற்றி-ஸ்பெடேனா தொடரூந்தில் டவுண்ஸ் வியு நோக்கிச் செல்லும் தொடரூந்தில் ஏறி இறுதித் தொடரூந்து நிலையமான டவுண்ஸ் வியூவில் இறங்கி சில நிமிடங்களிலிலேயே பொங்குத் தமிழ் நிகழ்வு நடைபெறும் இடத்தை அடைய முடியும்.
பேரூந்து மற்றும் தொடரூந்து போன்ற பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களால் கேட்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவர்கள் தமிழ்த் தேசியத்தின் நிறங்களான சிவப்பு மஞ்சள் நிறத்தில் உடைகளையணிந்து பிறகு சமூகத்தினரின் கவனத்தை ஈர்க்குமாறு வேண்டப்படுகின்றனர்.
இதேவேளை வணிகர்கள் மற்றும் அமைப்புக்களினால் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரூந்து மற்றும் இதர ஊர்திகளில் போக்கு வரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களைப் பெற சிரிஆர் வானொலியில் பெறலாம்.
http:///www.ctr24.com
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நாளை சனிக்கிழமை (05.07.08) பிற்பகல் 2:00 மணிக்கு பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மாபெரும் அமைவிடத்தில் நடைபெறவுள்ள பொங்கு தமிழ் நிகழ்வுக்காக பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடம் தொடர்பான விபரம் அனைத்து தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகள் ஊடாக இன்று மாலை அறியத்தரப்படும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கு தமிழ் நிகழ்வுக்காக கனடியத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய ஆரவாரத்துடன் தயாராவதை ஊடகங்கள் மூலமாக அறிய முடிகின்றது.
தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் ஊடகங்களும் இந்த வாரம் முழுவதும் பொங்கு தமிழ் குறித்தே முழங்கி வருகின்றன.
சகல தமிழ் வர்த்தக, சேவை நிறுவனங்களும் நாளை மூடவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிவித்துள்ளனர்

Comments