தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தாயக விடுதலைப் போராட்டத்தை வீச்சாக தம்மை உவந்தளித்த தற்கொடையாளர்களான கரும்புலிகளை ஒன்றுசேர நினைவில் கொண்டு முதன்மைப் பொதுச்சுடரேற்றி வைத்தார்.
வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று சனிக்கிழமை (05.07.08) நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, மறைமுகக் கரும்புலிகளின் பொதுத்திருவுருவப்படம் உள்ளிட்ட 356 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு திருமதி மதிவதனி பிரபாகரன், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கரும்புலிப்படையணிப் போராளிகள், போராளிகள் ஆகியோர் ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் தொடங்கின.
தேசத்தின் புயல்களான கரும்புலிகள் பாடல்களுக்கு மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது.
தலைமையுரையை இராஜன் கல்விப் பிரிவுப் போராளி நிலவன் ஆற்றினார்.
தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை வாழ்த்துப் பாடலுக்கான கரும்புலிப் படையணிப் போராளிகளின் நடனம் இடம்பெற்றது.
நிகழ்வில் ஆறு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
முதல் வெளியீடாக "கடற்கரும்புலிகள் பாகம் - 12" எனும் பாடல் குறுவட்டை கடற்புலிகள் சிறப்புத்தளபதி கேணல் சூசை
"எல்லாளன் பெயர் சொல்லி" எனும் பாடல் குறுவட்டை படையப் புலனாய்வு சிறப்புத்தளபதி இரத்தினம்
"அனுராதபுரத்துக்கு அதிரடி" எனும் குறுவட்டை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு
"உயிராயுதம் விவரண" குறுவட்டை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்
கரும்புலி மேஜர் நிலவனின் பாடல்களைக்கொண்ட "புதிய காற்று" குறுவட்டை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்
"கடற்கரும்புலிகள் பாகம் - 13" குறுவட்டை கடற்புலிகளின் தளபதி நரேன்
ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.
வெளியீடுகளை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பெற்று சிறப்பித்தார்.
தொடர்ந்து கலையரசி ஆசிரியையின் நெறியாள்கையில் பாடலும் ஆடலும், புதுவை அன்பனின் நெறியாள்கையில் கரும்புலிகளைச் சித்திரிக்கும் நாடகம், கடற்புலிகளின் சமகால நிகழ்வையொட்டிய நாடகம் ஆகியன இடம்பெற்றன.
Comments