சிங்கள அரசின் இனவெறித்தனத்தால் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்புயூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ் மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது.
மண்டபம் நிறைந்த மக்களுடன் சரியாக பி.ப:16:15 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பொதுச்சுடரினை திரு அந்தோனியோ பேயோ ஏற்றிவைக்க, சுவிஸ் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி புஸ்பராணி அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். அடுத்து ஈகைச்சுடரினை திருமதி மார்க்ரித்தா அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து மலர் வணக்கமும், அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்து கறுப்புயூலை நினைவினைச்சுமந்த “அழியாத நினைவுகள்’’ என்னும் நிகழ்வுடன் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதைத்தொடர்ந்து சுவிஸ் கலை பண்பாட்டுக்கழகத்தின் இசையில் விடுதலைகானங்கள் இசை நிகழ்வும், சுவிஸ் மகளிர் அமைப்பின் செயளாளர் திருமதி நிர்மலா அவர்களால் வரவேற்புரையும், “உள்ளத்தில் உறைந்துவிட்ட வடுக்கள்’’ என்னும் தலைப்பில் கறுப்பு யூலையின் நினைவைச்சுமந்த கவியரங்க நிகழ்வும், திருமதி மார்க்ரித்தா அவர்களது பேச்சும் இடம்பெற்றது.
அடுத்து தமிழர் பேரவை துணைப்பொறுப்பாளர் திரு.சண்தவராசா அவர்களால் சுவிஸ் மகளிர் அமைப்பினரால் வெளியிடப்பட்ட “கறிவேப்பிலை’’ என்ற நூலுக்கான முகவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து நூல் வெளியீட்டினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளை பொறுப்பாளர் திரு குலம்அண்ணா அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திரு. அல்பேட் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அடுத்து மகளிர் அமைப்பினரால் ஆண்டு தோறும் நடைபெறும் நல்வாய்ப்புச் சீட்டுக்குலுக்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து கிறபுண்டன்மாநிலம், ரிதாநடனாலயம், ராதாநடனாலயம் ஆகியவற்றின் மாணவர்களது நடன நிகழ்வுகளும், பேச்சும் இடம்பெற்றன.இறுதியாக மண்டபம் நிறைந்த மக்களுடன் தேசியக்கொடியிறக்கப்பட்டு, நிகழ்வுகள்யாவும் நிறைவுக்கு வந்தன.
Comments