பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு: 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு


பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு பிரித்தானியாவின் வேல் பகுதியில் உள்ள றிச்சர்ட்சன் இவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:40 மணிக்கு தொடங்கியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஏற்றினார்.


தொடர்ந்து, அகவணக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அரங்க நிகழ்வுகள் தொடங்கின.

பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் ஐம்பதுக்கும் அதிகமானோர் மஞ்சள், சிவப்பு வர்ண உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர்.

"We want Tamileelam" என மேடையில் இளையோர் முழங்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.



நாடகம் மற்றும் தமிழர்களின் மங்கல வாத்தியங்களான தவில், நாதஸ்வரக் கச்சேரி ஆகியன நடைபெற்றன.

தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார்.



இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் டேவ் உரையாற்றினார்.

தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனா உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் உள்ளுராட்சி அமைப்பின் சார்பாக சுரேஸ் கிருஸ்ணா உரையாற்றினார்.

தொடர்ந்து, சோசலிச எதிர்ப்பின் ஆசிரியரும் அதன் கெளரவ உறுப்பினருமான லியாம் மக் எய்ட் உரையாற்றினார்.

தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரும் கவிஞருமான புதுவை இரத்தினதுரையின் உரை ஒலிக்க விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்த சர்மா உரையாற்றினார்.

தொடர்ந்து, "உலகத் தாயே ஒன்றுபடு" எனும் பொங்கு தமிழ் பாடலுக்கு இளையோர்கள் எழுச்சி நடனம் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, பத்து வருடங்களுக்கு மேலாக பிரித்தானிய தொழிற்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த மைக் கிறசன் உரையாற்றினார்.

தொடர்ந்து, மனித விவகாரங்களுக்காக குரல் கொடுத்துவரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பானாட்ஸ் சாறா லுட்பேட் உரையாற்றினார்.



இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய தமிழ் உள்ளுராட்சி மன்ற அமைப்பின் தலைவர் தயா இடைக்காடர் உரையாற்றினார்.

தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோன் பற்றின் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் பகுதியின் முன்னாள் நகரபிதா யோகன் யோகநாதன் உரையாற்றினார்.

தொடர்ந்து, நடன நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

கொசவோ விடுதலை அமைப்பின் முக்கிய பிரதிநிதி ஒருவரும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

அரங்க நிகழ்வுகளைத் தொடர்ந்து "We want Tamileelam" என மேடையில் இளையோர் முழங்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.

இதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் பிரகடனம் படிக்கப்பட, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் பிரகடனத்தினை முழங்கினர்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனும் உறுதிமொழியுடன் இரவு 7:30 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.

பிரித்தானியாவில் முதல் தடவையாக நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றனர். அரங்க நிகழ்வினை நோக்கி மக்கள் வந்து கொண்டிருந்த போது லண்டனின் பிரதான சாலை முடக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வினை விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலும், லண்டன் ஐபிசி தமிழ் வானொலியும் நேரடி ஒலிபரப்புச் செய்திருந்தன.


Comments