சிங்கள தேசத்தின் பெரும்போருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்ளை அழைக்கிறார் வைகோ


வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் நடத்தப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகளுக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஈழத் தமிழின உணர்வாளருமான வைகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (14.07.08) அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புவனம் முழுவதும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில், நாடி நரம்புகளில் ஓடும் குருதி ஓட்டத்தில் தன்மான உணர்ச்சியை, தமிழ்க்குலத்தின் தொன்மை பண்பாட்டை ஊட்டுகிற நிகழ்ச்சிதான் பொங்கு தமிழ் எழுச்சி விழாவாகும்.

தமிழர் வாழ்வும், வளமும் மங்காத தமிழ்தான் என்பதையும், "கொலைவாளினை எடடா மிகுக்கொடியோர் செயல் அரவே" எனும் அறைகூவலையும் தமிழர் மனங்களில் ஆழப்பதிக்கும் பொங்குதமிழ் எழுச்சி விழா, பூமிப்பந்தில் புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் கொண்டாடும் பெருவிழாவாகும்.

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் தங்களின் பூர்வீக தாயகத்தை மீட்கவும், சிங்கள இனவாத அரசின் கொலைவெறித் தாக்குதலை போர்ப்பூமியில் முறியடித்து வென்றெடுக்கவும், அகிலம் எல்லாம் வாழும் தமிழர்கள் அனைத்து வழிகளிலும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய அடிப்படை கடமையை உணர்த்துகின்ற நிகழ்வுதான் பொங்கு தமிழ் எழுச்சி விழாவாகும்.

போர்ப் பூமியில் விண்ணிலும், மண்ணிலும், கடலிலும் வீரசாகசம் புரிந்து விடுதலைப் புலிகள் உலகத்தையே பிரமிக்க வைக்கிறார்கள். உலகத்தின் பல நாடுகளில் இருந்து ஆயுதங்களை பெருமளவில் வாங்கிக்குவித்துள்ள சிங்கள அரசு, போர் முனையில் புலிகளிடம் பலத்த அடி வாங்கி பல இடங்களில் புறமுதுகிட நேர்ந்தாலும் உண்மையை மூடி மறைத்து, ஹிட்லரின் கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தங்கள் கரம் ஓங்கி வருவதாக பித்தலாட்ட பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு அங்குலம்கூட சிங்கள காடையர் கூட்டம் ஊடுருவ முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு இனக்கொலை செய்து வரும் இரத்தவெறி பிடித்த ராஜபக்ச அரசு தமிழ் மக்களுக்கு உணவும் மருந்தும் இல்லாமல் செய்து, பட்டினிக்கும், நோய்க்கும் தமிழ் இனத்தைப் பலியிட திட்டமிட்டு நடத்தி வரும் கொடுமையை உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்துலக சமுதாயத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுகின்ற நிகழ்ச்சியாக பொங்கு தமிழ் எழுச்சி விழா அமையட்டும்.

ஈழ மண்ணில் நஞ்சுக்குப்பிகளைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, மரண பூமியில் தாயக விடுதலைக்காக தங்கள் உயிர்களை தாரைவார்த்துக் கொடுக்க வீட்டுக்கு ஒரு வீரப்புதல்வனும், வீரப்புதல்வியும் சூளுரைத்து களத்தில் நிற்கின்றனர்.

தமிழ் இனத்தின் தன்மான முகவரியாகி உள்ள விடுலைப் புலிகளின் தலைவர் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னிகர் இல்லாத தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போரில் வெல்வார். தமிழீழத்தைப் பிரகடனம் செய்து தமிழ்த் தேசிய அரசை அமைப்பார். அந்த நாளையும் இப் பூவுலகம் காணத்தான் போகிறது.

இரத்ததத்தைச் சிந்தி, உயிர்களைத் தந்து விடுதலைப் புலிகள் களத்தில் போராடும் நேரத்தில் உலகு எங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் தங்களால் இயன்ற விதத்திலெல்லாம் விடுதலைப் போருக்கு உதவ வேண்டியது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களை அவர்களின் சகோதரனாகிய வைகோ வேண்டுவது எல்லாம், ஆண்டுகள் பலவாக தமிழீழ விடுதலைப் போருக்கு தோள் கொடுத்து வந்துள்ள நீங்கள், வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்து பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்டப் போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள்.

உலகத்தின் மிகப் பழமையான இனமான தமிழ் இனத்தின் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் காக்கின்ற தளமாக தமிழீழம்தான் இருக்கமுடியும் என்ற ஒரே நம்பிக்கையை உறுதியாகக் கொண்டுள்ள எனது இதய வாழ்த்துக்களை பொங்கு தமிழ் எழுச்சி விழாக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments