ஒருதலைப் போர் நிறுத்தம் மீண்டும் ஒரு புலிகளின் முன்மாதிரி !சீதையின் தீக்குளிப்புக்கு நிகரானது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகப் பொது நீதி பாடித் தமிழ் இனத்தின் பண்பை உலகின் செவிகளில் பறை சாற்றிவர்; சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். அதையே இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தனது செயலில் காட்டி உலகை விழி பிதுங்க வைத்துள்ளது.

அன்றாடம் தனது பிராந்தியத்தில் உள்ள பொது மக்களின் குடியிருப்புக்கள் மீது கடந்த பல மாதங்களாகக் காலை மாலை இரவு பகல் பாராது இலங்கை அரசு குண்டு மழை எறிகணை வீச்சுக்களால் போர் நடத்தி அழிப்புகளைச் செய்து வருகின்றது. நாலா புறமும் போர்க் கள முனைகளைத் திறந்து எதிரி படைகளின் முழு முற்றுகையைப் பல மாதங்களாக நில வன்பறிப்பும் இன அழிப்பும் செய்து வருகிறது.

இத்தகைய நெருக்கடி நிலையிலும் ஆசியப் பிராந்திய அரசுகளின் உச்சி மகாநாட்டை இலங்கையில் அமைதியாக நடத்தி முடிக்க தமிழரின் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமான மேதகு வே. பிரபாகரன் ஒருதலையான போர் நிறுத்தத்தை அறிவித்து உலகை விழி; பிதுங்க வைத்துள்ளார்.

சில வானொலிகளின் அரசியல் ஆய்வாளர் அவதார திலகங்களும் தமது ஆதரவுத் தளத்தையும் அறிவு சூனியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தமது பக்கமே வெற்றியும் நியாயமும் இருப்பதாகக் கூறிக் கொக்கரிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கவும் வெட்டிப் பேச்சுப் பேச மட்டும்தான் தெரியும்.

புத்தகாயாவில் சித்தார்த்தனாகப் பிறந்து அன்பைப் போதிக்கும் முன்னமே அன்புக்கு அணிகலனாகத் திகழ்ந்தது தமிழனம் என்பதை அன்றைய புலவனின் கூற்று காட்டியது. அதே அன்பை இன்று போர் முகத்திலும் காட்டித் தமிழரின் பண்பு என்றும் மாறாமலும் எல்லையற்று விரிந்தும் கிடக்கிறது என உணர்த்தி விட்டார்.

இன்று போய் நாளை வாராய் என ஈழ வேந்தன் இராவணனைப் படைமுகத்தில் இராமன் கூறி விடை கொடுத்து அனுப்பினான் என இன்றும் எமது கம்பன் கழகப் பக்த கோடிகள் பொன்னாடை போர்த்திப் பாராட்டி இராமனுக்குப் புகழாரம் சூட்டுகின்றனர். கொழும்பில் உள்ள இந்த மனித மாணிக்கங்களுக்கு அங்கு வதைபடும் அப்பாவித் தமிழ் மக்களின் துயரும் கண்ணீரும் கவலை நிரம்பிய வாழ்வும் தெரிவதில்லை.

ஆனால் அப்படியான மக்களின் வதை பாடுகளின் நடுவே எதிர்த்துப் போரிடும் புலிகளின் இத்தகைய நற்பண்பும் மனித நேயமும் புரிவது என்றுமே இவர்களுக்குப் புரிவதில்லை ! தெரிவதில்லை. இவர்களுக்கு தீயில் இறக்கியது சரியா என்பது கூடக் கேட்கும் அளவுக்கு மனிதப் பண்பு கிடையாது. ஆனால் தீயில் இறங்கிய சீதையின் கற்பை உரசிப் பார்க்கும் பண்பே இருக்கிறது.

இத்தகைய பின்னணியில் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் எல்லா அரசுகளுமே ஈழத் தமிழர் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் நட்போ மனிதாபிமானமோ கருணையோ காட்டாத கருணை வள்ளல்கள் என்பதை உலகமே அறியும். இந்த நாடுகள் எல்லாம் எம் இனத்தை அழிக்கும் சிங்களத்துக்கே கோடி கோடியாகப் பணமும் ஆயதமும் பயிற்சியும் நேரடி உதவியும் வழங்கும் கொலைகாரர்கள். இப்படியானவர்களுக்கே எமது தலைவன் தன் ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

ஆயினும் எமது தலைவனைத் தூற்றுபவர் எப்போதும் தூற்றிக் கொண்டே இருப்பார்கள். இதில் சில வானொலிகளின் அரசியல் ஆய்வாளர் அவதார திலகங்களும் தமது ஆதரவுத் தளத்தையும் அறிவு சூனியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தமது பக்கமே வெற்றியும் நியாயமும் இருப்பதாகக் கூறிக் கொக்கரிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கவும் வெட்டிப் பேச்சுப் பேச மட்டும்தான் தெரியும். உருப்படியாகச் சிந்திக்கவும் செய்யவும் தெரியாது. எனவே அவர்களின் பேச்சுக்களை எமது காதுகளில் வாங்காது எமது வழியில் வாழ்வதே எமக்கு நளம் தரும்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுக்கும் கொக்கரிப்புகளையும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகமையப் பேச்சாளார் உதய நாணயக்காரா அவிட்டுவிடும் புளுகு மூட்டைகளை புலிகள் கிழக்கை விட்டே ஓடிவிட்டார்கள், மன்னாரை விடத்தல் தீவைப் பிடித்து விட்டோம் இரண்டு மாவட்டங்கள்தான் மிகுதியாக உள்ளது 70 வீதம் எமது கையில் 30 வீதம் இதோ அதோ எம் கையில் எனச் சொல்கிறார்கள்.

ஓட ஓளிய இடம் இல்லை அதனால் ஆசுவாசப் படுத்தவே இந்தப் போர் நிறுத்தம் எனக் கூவிக் கொக்கரிப்பர். ஜே.ஆரும், அத்துலத் முதலியும் டென்சில் கொப்பைக் கடுவையும் காமினி திசநாயக்காவும் விஜயதுங்காவும் சந்திரிகாவும் செய்தவற்றுக்கும் பேசியவற்றுக்கும் மேலாகவா இவர்கள் செய்து விடப் போகிறார்கள் ?

சந்திரனைப் பார்த்து நாய்கள் எப்போதும் குரைக்கத்தான் செய்யும் செய்ய முடியும்.

சிங்கள அரசின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுக்கும் கொக்கரிப்புகளையும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையப் பேச்சாளார் உதய நாணயக்காரா அவிட்டு விடும் புளுகு மூட்டைகளையும் பிரச்சாரச் செய்திகளைப் புலம் பெயர் தமிழர்களின் ஊடகங்களும் செய்தி என்ற பெயரால் ஒரு முறைக்குப் பல தடவை தினமும் எமது மக்கள் காதில் ஊதித் தள்ளி மக்களின் மனதில் பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

அரசின் செய்திகளை வெளி நாட்டு ஊடகங்கள் எதுவும் காணாது இருப்பது போல் புலம் பெயர் தமிழரின் ஊடகங்களும் அவற்றைக் கண்டும் காணாமலும் விடுவதன் மூலமே ஈழத் தமிழினம் சிங்களத்தின் பொய்ப் பிரச்சாரங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதாக அமையும். எமது இனமும் தனது போர் உத்திகளை உறுதியாக உலகின் முன்னே எடுத்துச் சென்று வெற்றிகளைக் குவிக்கவும் இத்தகைய நடை முறையே தேவை.

இந்தத் தேவையை உணர்த்தும் முகமாக அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளர் திரு.பாஇநடேசன் விடுத்த செய்தியில் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். “எதிரி தனது முப்படைகளையும் கொண்டு தமிழர் தாய் மண் மீது ஒரு கொடிய போரை ஏவிவிட்டுள்ளான்.

மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரையும் தொடுத்துள்ளான். உளவியல் போரின் இலக்காக மக்களை தேர்ந்தெடுத்திருக்கும் எதிரி மக்களிடையே வதந்திகளை பரப்பி மனங்களை குழப்பி வருகின்றான். எமது விடுதலைப் போராட்டத்தின் பலமாக திகழ்வது மக்கள் சக்தியே.

இந்த மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என எதிரி கணக்கிடுகின்றான். எனவே மக்களின் மனரீதியான தைரியத்தை கண்டு சரிப்பதன் மூலம் தமிழர் போராட்டத்தை அழிக்கமுடியும் என எண்ணி வதந்திகளை பரப்பி வருகின்றான். இந்த வதந்திகளின் காவு சக்தியாக நாம் இருந்தோமானால் அது நம் இனத்தை பலவீனமாக்கும் செயலுக்கு நாமே துணை போவதாக அமையும்.

எதிரியினால் திட்டமிட்டு பரப்பப்படும் உண்மையை போன்று தோற்றமளிக்கும் பொய்களை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும். நம்பிக்கையீனங்களை உருவாக்கி மக்களின் தன்னம்பிக்கையை உடைத்துவிட முயலும் எதிரியின் எண்ணத்தை முறியடிக்கவேண்டும் .

அரசியல் பிரிவுப் பொறுப்பாளரின் கோரிக்கையில் உள்ள உண்மைத் தன்மையை நாம் ஒவ்வொருவம் எமது முக்கிய கடனாக ஏற்று எம் இனத்தின் உயிர் வாழ்தலுக்கான வழிகளைக் கண்டு அறிந்து உறுதியுடன் தமிழீழ மண் மீட்புக்கான பணகளில் முழு மூச்சாக உழைக்க முற்படுவோமாக.

- பத்மா -

Comments