விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் யோகி
விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவரும் சர்வதேசம், தமிழ் மக்கள் தன்னுரிமையை வேண்டுகிறார்களா இல்லையா என்பதை அறியவும் விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளவும் கருத்துக் கணிப்பொன்றை நடத்திப்பார்க்க வேண்டுமென விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் சமர் ஆய்வுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தடை செய்துவிட்டன என்பதற்காக விடுதலைப் புலிகளின் போராட்டம் நின்றுவிடப்போவதில்லை. எம்மை தடை செய்துவிட்டார்களென்பதற்காக அவர்கள் தருவதை பிச்சையெடுக்கவும் நாம் தயார் இல்லையெனவும் தெரிவித்த யோகி, உலக நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துவிட்டது என்பதற்காக சிங்களவர்களும் புத்தராக மாறிவிடப்போவதில்லையெனவும் கூறினார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்த��
�க்கு வழங்கிய பேட்டியிலேயே யோகி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியின் முக்கிய விடயங்கள் வருமாறு;
சர்வதேசத்தைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை அது கொச்சைப்படுத்துவதை இன்று பார்க்கிறோம். தன்னுரிமையை மறுத்து நிற்பதை பார்க்கிறோம். நெல்சன் மண்டேலாவைக் கூட அண்மையில்தான் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கினார்கள். இப்படியான செயற்பாடுகள் வியப்பையும் ஆச்சரியத்தையுமே தருகின்றன.
இருதரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் ஒரு தரப்பை பலவீனப்படுத்தி விட்டு ஒரு தீர்வை முன்வைக்கும் காலங்காலமான ஒரு போக்கையே இன்றைக்கும் சர்வதேசம் கொண்டிருக்கிறது. இதனை அமைதிக்கான போர் என்று சொல்கிறார்கள்.
இதற்கான ஒரு சோதனைக் களமாகத்தான் இலங்கையும் தமிழீழமும் பார்க்கப்படுகின்றது. எங்களைப் பொறுத்தவரை எவ்வளவுதான் அழுத்தங்கள், தடைகள் வந்தாலும் நாம் போராடுவோம். ஏனெனில், நாங்கள் உரிமைக்காகப் போராடுகின்றோம்.
ஜனாதிபதியுடன் சேர்ந்திருந்தால் அவர் எதுவும் தருவார். அதனை வாங்கிக்கொள்ளலாமென டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், ஆனந்தசங்கரி போன்றவர்கள் நினைக்கின்றனர். ஆனால், இவர்களால் எதுவுமே செய்ய முடியாது. சிங்களவர்களைப் பொறுத்தவரை அவர்களிடம் எதையுமே கேட்டுப்பெற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை அரசு ஒரு திட்டத்தின் அடிப்படையில் தற்போது இயங்குகிறது. கிழக்கை முதலில் பிடிப்பது. அடுத்து மன்னார் கரையோரங்களைக் கைப்பற்றுவது பின்னர் பூநகரியை பிடிப்பது அடுத்து சுண்டிக்குளத்திலிருந்து திருகோணமலை வரை இடங்களைக் கைப்பற்றுவதே அரசின் தற்போதைய திட்டம்.
தமிழீழ மண்ணில் ஏறத்தாழ 170 கிலோமீற்றர் கோட்டில் நாளாந்தம் சண்டையிடுகின்றோம். தினமும் வீரச்சாவடைகின்றோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த வீரச்சாவுகள் இடம்பெறுகின்றன.
ஆரம்ப நாட்களில் நாங்கள் போராடியபோது தமிழக முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். பணம் தருவார், இந்தியா எங்களுக்கு பயிற்சி தரும் என்று நாங்கள் எண்ணவில்லை. இந்தியாவோடு போரிடும்போது எங்களுடைய பரம எதிரியான இலங்கையரசு எங்களோடு பேசும் எங்களுக்கு ஆயுதம் தரும் என்று எண்ணிக் கொண்டு போராடவில்லை. நாங்கள் நினைத்ததெல்லாம் போராடிக் கொண்டே இருக்கவேண்டும். அதுவிட முடியாத இலக்கு. போராடாவிட்டால் எங்களுக்கு வாழ்வில்லை.
20 ஆயிரம் போராளிகளை இழந்திருக்கிறோம். மக்களை இழந்திருக்கிறோம். உறவினர்களை, சொத்துக்களை, நண்பர்களை இழந்திருக்கிறோம். அப்படியிருந்தும் நாம் தளர்ந்து போகவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்கள் மீது திணிக்கப்படுகின்ற எதனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கின்றோம்.
எங்களுடைய விடுதலையை நோக்கி போராடுவோம். அதற்காக அனைவரும் வீரச்சாவடையவும் தயாராகவுள்ளோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. போராடுபவன் நிச்சயம் வெற்றி பெறுவான். அதற்கு காலம் கனிய வேண்டும். அந்த கனிகின்ற காலத்துக்காக நாம் போராடத்தான் வேண்டும்.
இலங்கை அரசுடன் பேசியோ அல்லது ஏதோவொரு முறையில் கேட்டோ எந்தவொரு உரிமையையும் பெற்றுவிட முடியாது என்பது எமக்கு தெரிந்த விடயம். அதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி நம்பிக்கை வைத்தால்தான் இந்தப் போராட்டம் வெற்றி பெறும்.
உலக நாடுகள் வேண்டுமென்றே சில வேலைகளைச் செய்யும் உலக நாடுகளில் தான் பிழை இருக்கிறது. இவர்கள் கூறுவது சரிதானா என்பதை மக்களிடையேயான கருத்துக் கணிப்பாக ஏன் நடத்தக்கூடாது என்று கேட்டால் அப்போது அந்த நாடுகள் சிக்கல்படும். பலர் தூங்குவது போல் நடித்துக்கொண்டிருக்கின்றனர��
�. இவர்களை விழித்தெழ வைப்பதற்கு அந்த நாட்டு மக்களாலும் அங்கு வாழ்பவர்களாலும் தான் முடியும்.
எங்களைப் பொறுத்தவரை உலக நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் இடித்துரைக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதேவேளையில், அந்நாடுகளின் தலைவர்களை யார் தெரிவுசெய்தார்களோ அவர்களுக்கு ஊடாக அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு சில செய்திகளை சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது.
அதற்காக காலம் எடுக்கலாம். சிலவேளைகளில் அதற்காக நாங்கள் உயர்ந்த அளவில் துன்பப்பட வேண்டி வரலாம். ஆனால், நம்பிக்கையை கைவிடாது எமது முயற்சியை தொடர வேண்டும் என்பதற்காகவே சகல நாடுகளிலும் பொங்கு தமிழ் நிகழ்வுகளை நடத்துகிறோம்.
எனவே, எங்களுடைய போராட்டத்தை சான்றாகக் கொண்டு நாளாந்தம் போராளிகள் செய்கின்ற தற்கொலைகளை மக்கள் செய்கின்ற ஒப்படைப்புகளை கருத்திற்கொண்டு புலம்பெயர் வாழ் மக்கள் தளர்வடையாமல் உறுதியாக நின்று போராடுவார்களாயின் அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

Comments