சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அளித்து வரும் இராணுவ உதவி மற்றும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுதல் ஆகியவை குறித்து பழ. நெடுமாறன் தலைமையில் அனைத்து கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புக்களின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டம் சென்னையில் உள்ள பெரம்பூர் காமராசர் நூற்றாண்டு மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் பங்கேற்ற பலரும் சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அளித்து வரும் இராணுவ உதவியைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து சுட்டுக்கொல்வதைக் கண்டித்தும் தம் கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்துடன் இவற்றை கண்டித்து அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பேசும் போது, "அனைத்து கட்சிகளும், அனைத்து தமிழர் அமைப்புக்களும் இணைந்து சென்னையில் பெரியதொரு பேரணி நடத்த வேண்டும் என்றும், பேரணியின் முடிவில் தீப்பந்தம் ஏந்தி உறுதிமொழி ஏற்க வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்துரையாடலின் முடிவுரையாக மருத்துவர் இராமதாசின் வேண்டுகோள் குறித்து கூட்டத்தினரின் ஒப்புதலைப் கேட்க, கூடியிருந்தோரின் ஒட்டுமொத்த ஆதரவோடு அதுவே கூட்டத்தின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அப்பேரணி நடத்துவதற்குரிய நாள் விரைவில் அறிவிக்கப்படும் என பழ. நெடுமாறன் தெரிவிக்க கூட்டம் கலைந்தது.
இக்கூட்டத்தில்
பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாஸ்
இ.தே. லீக் தலைவர் பசீர் அகமது
ச. நீ. கட்சித் தலைவர் ஜெக வீரபாண்டியன்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன்
இலட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.இராஜேந்தர்
த.தே.பொ.க. சார்பில் கி.வெங்கட்ராமன்
த.தே.இ. பொதுச் செயலாளர்கள் கா. பரந்தாமன்
கே.செளந்திரராசன்
முருகேசன்
தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் செரோன் குமார்
இயக்குநர்கள் வி.செ.குகநாதன்
புகழேந்தி தங்கராஜ்
மா.பெ.பொ. கட்சி சார்பில் வாலாசா வல்லவன்
தமிழேந்தி
த.தே.மா. கட்சி செயலாளர் இராசேந்திரசோழன்
உ.த.பே. பொருளாளர் சந்திரேசன்
துணைத்தலைவர் தமிழப்பன்
பத்மநாபன்
ம. ம.த. தலைவர் பூ. துரையரசன்
ம.பொன்னிறைவன்
பேராசிரியர் மருதமுத்து
த.நீ. கட்சி அமைப்பாளர் த.தமிழன்
உதவும் உள்ளங்கள் இரா.சந்திரசேகரன்
எழுகதிர் ஆசிரியர் அருகோ
யாதும் ஊரே ஆசிரியர் நா. வை. சொக்கலிங்கம்
சி.பா. அருட்கண்ணனார்
கி.த. பச்சையப்பன்
வீ.இறையழகன்
அ.சி. சின்னப்பத் தமிழர்
வீர சந்தனம்
குமரி நம்பி
பாவலர் மு. இராமச்சந்திரன்
சங்கமித்ரா
உட்பட 200-க்கும் அதிகமான தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Comments