யாழில் இளம் யுவதிகளை சீரழிக்கும் படையினர்.

யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் அங்குள்ள இளம் பெண்ணகளை அச்சுறுத்தி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி வருவதாக, குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பாதிக்கப்படும் இந்தப் பெண்கள் அச்சம் காரணமாகவும், சமூகக்கட்டுப்பாடு, மற்றும் எதிர்காலம் கருதியும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளியே கூறாது தவிர்த்து வருகின்றனர்.

தீபன், மகேசன், இமான், சரத் போன்ற பெயர்களில் இயங்கும் சிங்கள புலனாய்வாளர்கள் தமது பிரதேசங்களிலுள்ள பெண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உண்மைகளை வெளிகொண்டு வருவதற்கு பலர் முயற்சிக்கின்ற போதிலும், அதன் பின்னர் தப்பிச் செல்ல வழியில்லாத காரணத்தினால், மக்கள் மெளனிகளாக இருக்கின்றனர்.

இளம் பெண்கள் மட்டுமன்றி திருமணம் முடித்த பெண்களும் இவ்வாறான அச்சுறுத்தலுக்கும், பாதிப்பிற்கும் உள்ளாகுவதால், உரியவர்கள் தமக்காக குரல்கொடுக்க வேண்டும் என, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இந்த பெண்கள் ஐரோப்பிய தொலைக்காட்சி ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

தென்மராட்சி கச்சாய் பகுதியில் இதுவரை 8 இளம் பெண்கள் சிறீலங்கா படை புலனாய்வாளர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கச்சாய், கைதடி பகுதிகளில் ரமேஸ், சுரேஸ், கணேஸ் என்ற தமிழ் பெயர்களில் இயங்கும் படைப் புலனாய்வாளர்களே இளம் பெண்களை குறிவைத்து வருகின்றனர்


Comments