தாய் மண்ணை காப்பதற்கும் மீட்பதற்கும் முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது.
முன்னாள் விடுதலை வீரர்களான நீங்கள் உங்கள் தாய் தேசம் முகம் கொடுத்திருக்கும் போர் நெருக்கடிக்கிடையில் தாய் நாட்டிற்கு நீங்கள் புரிய வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம்.
இந்த தேசத்தின் மைந்தர்களான நீங்கள் எமது மக்களும் மண்ணும் எதிரியின் பேரவலத்துக்குள்ளளாவதை ஒரு போதும் விரும்பமாட்டீர்கள் மானமுள்ள வீரமுள்ள எந்த தூய வீரனும் இதை விரும்பமாட்டான் உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உணர்வும் குருதியில் ஓடும் ஓர்மமும் தேச விடுதலையை நோக்கி தள்ளவே செய்யும் இதன் முலம் நீங்கள் உயிரினும் மேலாக அன்பு செய்யும் தாய் நாட்டிற்கு ஆபத்து என்றவுடன் ஓடி வரும் உங்கள் கடமை உணர்ச்சியை காட்டுவதன் மூலம் என்றும் மதிப்பளிக்கப்படுவீர்கள்.
அன்புக்குரியவர்களே
நீங்கள் விடுதலை அமைப்பிலிருந்து விலகி இன்று திருமண பந்தத்தில் இணைந்து உங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கையில் இணைந்திருக்கின்றீர்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிரி சீர் குலைக்க விழைகின்றான். எங்களது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள சிப்பாய் குடும்பங்களையும் குழந்தைகழையும் பிரிந்து வந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியுமானால் விடுதலைக்காக போராடும் எங்களால் மட்டும் ஏன் முடியாது.
எங்களால் முடியும் இந்த மனவுறுதி உங்களிடம் உண்டு எனவே அன்புக்குரிய முன்னாள் போர் வீரர்களே இந்த அவசரமும் அவசியமானதுமான வேண்டுகோளை நீங்கள் ஏற்று விடுதலை அமைப்பில் உங்களை உடனடியாக இணைத்து கொள்வீர்கள் என நம்புகின்றோம் எமது மண்ணில் எதிரியால் நிகழ்த்தப்பட்ட எத்தனையோ படை நடவடிக்கைகளை வல்வளைப்புகளை முறியடித்து சாதனை படைத்த வீரர்கள் நீங்கள் உங்களிடம் குறைவில்லாத போர் அனுபவமும் ஆற்றலும் நிறம்பி கிடக்கின்றது.
நீங்கள் இன்று பெரும் படையாக எழும்பி நிற்கும் புதிய படை வீரர்களுடன் இணைவதன் மூலம் எதிரியின் இந்த வல்வளைப்பு முயற்சியை முறியடித்து எமது மக்கள் விரும்பும் விடுதலையை அவர்களுக்கு பரிசாக வழங்க முடியும் ஆகவே இந்த அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோளை உங்களிடம் உரிமையுடன் முன்வைக்கின்றோம் எனவும் தமிழீழ அரசியல்துறை தெரிவித்துள்ளது.
புலிகளின் குரல்

Comments