கிழக்குக் கடற்படைக் கட்டளை மையமே வான் தாக்குதலின் இலக்கு என புலிகள் அறிவிப்பு

கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.15 மணியளவில் தமிழீழு விடுதலைப் புலிகளின் வான்படையினர் திருகோணமலை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா கடற்படைக் கட்டளை மையத்தினை இலக்கு வைத்தே தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.


இத்தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டும் 35 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


இதன்போது தாக்குதலில் ஈடுபட்ட வான்னோடிகள் தளம் திரும்பியதை அடுத்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சந்தித்தபோது எழுக்கப்பட்ட புகைப்படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டுள்ளது.


Comments