திருகோணமலைத் துறைமுகம் மீது வான்புலிகள் குண்டு வீச்சு

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றிரவு 9.05 மணியளவில் வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



வான்புலிகளின் வான்வழித் தாக்குதலை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் அரை மணி நேரம் பாரிய வெடியோசைகள் செவிமடுக்கப்பட்டதாக குடிசார்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிறீலங்கா கடற்படையினர் வான்நோக்கி சரமாரியான துப்பாக்கி வேட்டுகளை நடத்தியுள்ளனர். சேதவிபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. தாக்குதலை அடுத்து அப்பகுதிக்கான மின்சாரமும், தொலைத்தொடர்புகளும் சிறீலங்கா படையினரால் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் புலிகளின் வான்வழித் தாக்குதலையடுத்து, சிறீலங்காவின் வான்படையின் கிபிர் யுத்தவானூர்திகள் கிளிநொச்சிப் பகுதியில் குண்டு வீச்சுக்களை நடத்திவிட்டுச் சென்றதாக வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.


Comments