வன்னியின் சகல முனைகளிலும் கடும் தாக்குதலை ஆக்கிரமிப்பாளர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரியவரும் அதே வேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபாகளை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு ஐ.நா அமைப்புகளும் சர்வதேச தொண்டர் அமைப்புகளும் செல்வதை முடிந்த வரை தவிர்க்குமாறு அவற்றுக்கு படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்து மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருவார்களென அரசும் படைத்தரப்பும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்த்த போதும் மக்கள் எவருமே ஆக்கிரமிப்பாளரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை. மாறாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பான இடங்கைள நோக்கியே மக்கள் செல்கின்றனர்.
க.பொ.த(உயர்தரம்) பரீட்சை நடைபெற்று வருகின்ற போதும் அங்கு தாக்குதல்களை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று அங்கு 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்ற போதும் தாக்குதல்கள் தணியவில்லை.
அதேநேரம், மணலாறு, களமுனைப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு, நெடுங்கேணி ஆகிய பகுதிகளை நோக்கி மாலை 5மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிகவும் உக்கிரமான ஷெல் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வதிவிடங்களிலிருந்து அனைத்து உடமைகளையும் கைவிட்ட நிலையில் இடம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக படையினரல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஷெல் வீச்சுக் காரணமாக நூற்றுக் கணக்கான குடியிருப்புகள், உடமைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், பெருமளவிலான கால் நடைகளும் உயிரிழந்துள்ளன.
இடம் பெயர்ந்த மக்கள் உணவு, மருத்துவதும் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி வீதியோரங்களிலும் காடுகளுக்குள்ளும் தஞ்சமடைந்துள்ளதாகவும் அறியவருகிறது.
பெரும் அவல நிலையை எதிர்கொள்ளும் இடம் பெயர்ந்த மக்கள் கைவிடப்பட்ட நிலையிலுள்ள உடமைகளை மீட்டுபதற்காகவோ அல்லது வீடுகளைச் சென்று பார்வையிடவோ முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
இதே வேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் மீது தினமும் இலங்கை விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்p வருவதாகவும் தெரியவருகிறன்றது. அத்துடன் ஆட்களற்ற உளவு விமானங்கள் (யூ.ஏ.வீ.) இப்பிரதேசங்களில இரவு நேரங்களல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
நன்றி தினக்குரல்.

Comments