உறவுகளே! சிந்தியுங்கள் உடன் செயல்படுங்கள்!

அன்பான எம் புலம்பெயர் உறவுகளே

பிரான்சின் தலைநகரமான பாரிசினில் வருகின்ற ஞாயிற்றுகிழமை (31.08.2008) மாணிக்கவிநாயகரின் தேர்த்திருவிழா நடைபெறுகின்றது.நல்ல விடயங்களை நாங்களும் தட்டிகொடுத்து செயல்படுத்துவது என்பது எமது தார்மிக கடமையாகும்.



அந்த வகையில் இந்த தேர்த்திருவிழாவில் நீங்கள் அவதானிக்க வேண்டிய சிலவிடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்,நீங்களும் தெரிந்து கொள்ளுவது தான் சரியாக இருக்கும் என்பது இன்றைய நிலையில் சரியானது.

பாரிஸ் பகுதியில் தமிழர்கள் தினமும் கூடும் குட்டி யாழ்பாணம் என்றழைக்கப்படும் லாசப்பல் பகுதியில் இருந்து தேரினில் விநாயகர் வீதி உலா வருவதாக உள்ளார். வீதிவழி உலா வரும் லாசப்பல் பகுதியில் அல்லது மார்க்கடே புவசினியர் என்ற வீதி வழியாக வந்து விநாயர் ஆலயத்துக்கு செல்லும் அந்த 13கிலோமிற்றர் தூரத்துக்காக எம்மவர்களால் செலவழிக்கப்படும் பணத்தினை பற்றி யாராவது அறிந்து கொண்டுள்ளீர்களா ?

ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக விநாயகருக்கு அடிக்கப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையை விநாயகர் கூட கணக்கெடுக்க முடியாது அந்தளவு தேங்காய்களை அந்நியநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விநாயகப்கடவுளுக்கு காணிக்கையாக்குவார்கள்.

விநாயகரின் தேர் முன்பாக செல்ல அதற்கு பின்பாக பாரிஸ் நகரசபையின் வீதி துப்பரவு உழியர்கள் அணிவகுத்து சென்று எம்மவர்கள் விநாயகருக்கு உடைக்கும் தேங்காய்களின் கழிவுகளை துப்பரவு செய்வார்கள் அதற்காக பாரிஸ் நகரசபைக்கு கொடுக்கப்படும் பல ஆயிரம் யுரோக்கள் அவர்களிடம் போய் சேருகின்றன.

அதன் பின்பு விநாயகர் வீதிவழி செல்வதற்கு அனைத்து வழிகளையும் மூடி ஒத்துழைப்பு தரும் நகரசபைக்கும் காவல்துறைக்கு இறைக்கப்படும் யுரோக்கள் கணக்கில் எடுக்க முடியாதவை அப்படி இருந்தும் இவை வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்திருவிழா பாரிசினில் நடைபெற ஒழுங்கு செய்யப்படுள்ளது.

நாங்கள் சொல்லவருகின்ற விடயம் என்னவென்றால் பல ஆயிரம் யுரோக்களில் போட்டிக்கு தேங்காய் உடைக்கும் வர்த்தகர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

இன்று தமிழீழ வன்னிப்பகுதியில் கை;குழந்தை முதல் கட்டையில் போகும் வயோதிபர்கள் வரை ஒரு நேர உணவுக்கு ஏங்கி தவிக்கிறார்கள். அவர்களின் பசியினை போக்கினால் இறைவனை அந்த மக்களின் முகங்களில் காணலாம்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று எமக்கு சொல்லியுள்ளார்கள் அனால் இன்று எம் கண்முன்னே கைக்குழந்தை பசியுடன் ஏங்குகின்றது, இந்த துயரத்தை மாற்றாமல் நாங்கள் விநாயகருக்கு தேங்காய் செலுத்தி என்ன பலனை அடையப்போகின்றோம் என்பதை தழிழனாகிய நாங்கள் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டாமா ?

இந்த நிமிடம் சிந்தித்து செயல் படவில்லையென்றால், எங்ககளின் உறவுகளை நாங்கள் எந்த வேளையிலும் காப்பற்ற முடியாது !

சுயமாக சிந்திப்போம்
சுதந்திரமாக எம் மக்கள் வாழவழி சமைப்போம்.




Comments