வன்னிக் கட்டளை மையத் தாக்குதலில் ராடார் நிலையம், ஆயுதக் களஞ்சியம், தொலைத்தொடர்பு கோபுரம் தாக்கியழிப்பு! 20 படையினர் பலி!

வவுனியாவில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டளை மையத்தில் அமைந்துள்ள ராடார் நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் வவுனியா கட்டளைப் பீடத்தினுள் ஊடுருவிய தமிழீ விடுதலைப் புலிகளின் சிறப்பு கரும்புலி அணி ஒன்று ராடர் நிலையத்தை தாக்கிய அழித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து கரும்புலி சிறப்பு அணியினர் வவுனியாவில் அமைந்துள்ள வன்னிக் கட்டளை மையம் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர். கரும்புலி அணியினருக்கு ஆதரவாக கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரால் செறிவான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகளின் வான்படையினர் கட்டளை மையம் மீது துல்லியமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

வன்னிக் கட்டளை மையத்தில் அமைந்துள்ள தொலைத் தொடர்பு கோபுரம், ஆயுதக்களஞ்சியம், தொழில்நுட்ப ஆய்வகம், வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாக கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டன.

இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வன்னிக் கட்டளை மையம் மீது வான் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிய இரு வானூர்திகளும் பத்திரமாக தளம் திரும்பியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 10 கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்து வீரகாவியம் படைத்துள்ளனர்.

வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர்கள்

1. லெப்.கேணல் மதியழகி
2. லெப்.கேணல் வினோதன்
3. மேஜர் ஆனந்தி
4. மேஜர் நிலாகரன்
5. கப்டன் கனிமதி
6. கப்டன் முத்துநகை
7. கப்டன் அறிவுத்தமிழ்
8. கப்டன் எழிலழகன்
9. கப்டன் அகிலன்
10. கப்டன் விமல்

ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர்

இவ் வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்


Comments