இடம்
கனடா கந்தசுவாமி கோவில்
செப்ரம்பர் 20 ம் திகதி மாலை 5 மணி முதல்
இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகியது
பெருமளவான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்
நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்
BIRCHMOUNT AND EGLINGTON சந்திக்கு அருகாமையில்
CTR வானொலியினூடாக நேரடியாக கேட்கலாம்
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்கான பாரிய நிதி சேகரிப்பு நிகழ்வாக கனடா வானம்பாடிகளின் "தாய்மடி தாங்குவோம்" 27 மணிநேர தொடர் இசைப் பயணம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்வு கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் 733 Birchmount Road, Scarborough இல் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெறுகின்றது.
கனடாவின் முன்னணி இசைக்குழுவாக திகழும் வானம்பாடிகளின் இசைக்கலைஞர்கள் 27 மணிநேர தொடர் இசைப்பயணத்தினை தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக தொடங்கியுள்ளனர்.
இந்த இசைக்குழுவில் 20-க்கும் அதிகமான கலைஞர்கள் உள்ளனர். இவர்களுடன் 72-க்கும் அதிகமான பாடகர்கள் இணைந்து நூற்றுக்கணக்கான பாடல்களை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிவரை வழங்கவுள்ளனர்.
கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு இந்நிகழ்வு தொடங்கியது.
நிகழ்வில் மங்கல விளக்கினை கடந்த வருடம் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் பரமு சிவா ஏற்றினார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து "தாய்மடி தாங்குவோம்" 27 மணிநேர இசைப்பயணம் தொடங்கியது.
ரொறன்ரோவின் பெரும்பாலான வர்த்தகர்கள், சின்னஞ்சிறார்கள் உட்பட பெருமளவிலானோர் அல்லலுறும் மக்களுக்கு தமது நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
நிகழ்வில் பெருமளவிலான சிறார்கள் தாம் சேகரித்த உண்டியல் பணத்தினை மேடையில் வழங்கி வருகின்றனர்.
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையின் போது மூன்று நாட்களுக்கு மேலாக மணலில் புதையுண்டிருந்து காப்பாற்றப்பட்ட சின்னஞ்சிறுமி ஒருவர் தான் சேகரித்த நிதியினை மேடையில் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் கையளித்த நிகழ்வு மண்டபத்தில் குழுமியிருந்த பலரையும் கண்கலங்க வைத்த நிகழ்வாக இருந்தது. இச்சிறுமி தனது இரு சகோதரர்களையும் ஆழிப்பேரலையில் இழந்திருந்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வருகை தந்து தமது பங்களிப்பினை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். தொடர்ந்து இசைப்பயணம் நடைபெறுகின்றது.
Comments