வன்னேரிக்கும் அக்காராயனுக்கும் இடையில் புலிகள் முறியடிப்புத்தாக்குதல்: 30 படையினர் பலி; 50 பேர் காயம்; 10 உடலங்கள் மீட்பு

வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான இருமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.



50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் பத்து உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் 8 ஆம், 9 ஆம், 10 ஆம் கட்டைப் பகுதிகளில் இரண்டு முனைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பெருமெடுப்பில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் அதிகாலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை இரண்டு முனைகளில் கடும்தாக்குதலை மேற்கொண்டனர்.

சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இம்முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலால் முறியடிக்கப்படடன.

நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் பகுதியில் நடைபெற்ற மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

நாச்சிக்குடா மோதலில் 7 உடலங்களும் வன்னேரி அக்கராயனில் 22 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.



முறியடிப்பு சமர் படங்கள்:













Comments