சிறீலங்கா இராணுவத்தினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டும், குழந்தையுடன் 3 சிறார்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதல் இன்று மாலை 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் இதில் இரத்தினபுரம் பிள்ளையார் கோவில் மற்றும் மக்களின் 13 வீடுகள் சேதமாகியும் அழிந்தும் உள்ளன. இரண்டு டுகள் முற்றாக அழிந்துள்ளன.
தாக்குதலின்போது வீடுகளில் இருந்த வீதியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏழு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை.
இரத்தினபுரத்தைச் சேர்ந்த சதீஸ் அருட்செல்வி (வயது 27)
அவரின் மகன் சதீஸ் தனுசிகன்
மகள் சதீஸ் தனுசிகா ஆகிய சிறுவர்களும்
மாதக் குழந்தையான காந்தராசா துவாரகன்
அவரின் தாயான காந்தராசா பவானி (வயது 36)
மாணிக்கப்பிள்ளை மங்களேஸ்வரி (வயது 62)
நாச்சிக்குடாவிலிருந்து இடம்பெயர்ந்து வட்டக்கச்சி நோக்கிச்சென்று கொண்டிருந்த கே.ஜெயந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினரின் வதிவிடம் இருக்கின்றது. அதிலிருந்து குறும் தொலைவிலிருக்கும் மக்கள் குடியிருப்பு மீதுதான் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.
Comments