அக்கராயன் முறியடிப்புத் தாக்குதில் 8 படையினர் பலி! 20 பேர் காயம்! 4 உடலங்களும், படைக் கருவிகள் மீட்பு
அக்கராயன் மற்றும் திருமுறிகண்டிப் பிரதேசங்களை வல்வளைப்புச் செய்யும் நோக்குடன் சிறீலங்கா படையினர் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். படையினரின் இந்த ஆக்கிரமிப்பு முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு முறியடிப்பு அணிகள் களமிறக்கப்பட்டு, சிறீலங்காப் படையினருக்கு எதிரான முறியடிப்பு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் திருமுறிகண்டி - அக்காராயன் வீதியில் உள்ள முதலாம் கட்டை மற்றும் இரண்டாம் கட்டை ஆகியவற்றை ஆக்கிரமிக்கு நோக்குடன் வல்வளைப்பு நகர்வுகளில் சிறீலங்காப் படையினரின் 57 படைப் பிரிவில் 3 பற்றாலியன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இப் படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகளான சாள்ஸ் அன்ரனிப் படையணி மற்றும் இம்ரான்-பாண்டின் படையணி ஆகியன முறியடிப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
இந்த முன்னகர்வு முறியடிப்புத் தாக்குதல்களில் 8 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 படையினர் காயமடைந்துள்ளன என ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறியடிப்புத் தாக்குதலில் விடுவிக்கப்பட்ட இடங்களில் கொல்லப்பட்ட படையினரது 4 உடலங்களும், பெருமளவான படைக் கருவிகள் மற்றும் வெடிபொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.
பி.கே எல்.எம்.ஜி - 02
பி.கே எல்.எம்.ஜி ரவைக்கூடுகள் - 2
ஏ.கே எல்.எம்.ஜி - 03
ஏ.கே எல்.எம்.ஜி ரவைக்கூடுகள் - 03
ராங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்தி (LAW) - 03
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 03
ஏ.கே ரி56-2 ரகத் துப்பாக்கிகள் - 07
ஏ.கே ரி56 ரகத் துப்பாக்கிகள் - 06
கிளைமோர்கள் - 14
ஏ.கே ரவைக்கூடுகள் - 27
ஏ.கே எல்.எம்.ஜி ரவை இணைப்பிகள்
தண்ணீர் கொல்கலன்கள்
நிற வெளிச்சக் குண்டுகள் -04
ரவைக்கூடு தாங்கிகள்
உட்பட பல ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னேற்ற முயற்சியின்போது சிறீலங்கா படைகள் வீசும் எறிகணைகள் ஏ-9 வீதியை அண்மித்து வீழ்ந்து வெடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சமர் தொடர்வதால் மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன…
Comments