புலிகளின் நவீன ஆயுதங்கள்

இன்றைய நாலாங்கட்ட ஈழப்போரில் நவீன ஆயுதங்களின் பாவனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

படையினரும் புலிகளும் நவீன ஆயுதங்களை அறிமுகப்படுத்துவதும் அதை எதிர்த்தரப்பு மீது பிரயோகித்து அவர்களை திக்கு முக்காடச்செய்து இழப்புக்களை ஏற்படுத்தவும் முயல்கின்றனர்.

தற்போதைய காலத்தில் உலகின் நவீன ஆயுதங்கள் அறிமுகமாகிக்கொண்டு இருக்கின்றன.அரசாங்கங்களைப்பொறுத்தவரை அவ் நவீன ஆயுதங்கள் அவர்கள் கையில் இலகுவில் கிடைத்து விடுகின்றன.அவ்வாறே இலங்கை இராணுவமும் நவீன ஆயுதங்களை வாங்கிக்குவித்துள்ளது.

ஆனால்போராட்ட இயக்கங்களை பொறுத்தவரை அவர்கள் கையில் நவீன ஆயுத்ங்கள் இலகுவில் கிடைப்பதில்லைஅவற்றை அவர்கள் கறுப்புச்சந்தையிலேயே பெறுகிறார்கள்.புலிகளைப்பொறுத்தவரை அவர்கள் நவீன ஆயுதங்களைப்பெறுவதில் பின் நிற்பதில்லை.தாய்லாந்து பர்மா செக்லோவாக்கியா போன்ற நாடுகளில் இருந்து அவர்கள் அதைப்பெறுகிறார்கள்.அந்தவகையில் புலிகள் 1990 கோட்டை யுத்தத்தின் போது "பசிலன்" எனப்படும் தமது சொந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருந்தனர்.

பின் மாங்குளம் மீதான யுத்தத்தின் போதும் சிலாவத்துறை மீதான யுத்தத்தின் போதும் பசிலன் ஏவுகணையை அவர்கள் திறம்பட பாவித்து இருந்தனர்.அதற்கு முன்னால் புலிகளால் ஜொனி எனப்படும் கண்ணிவெடி இலங்கைப்படையினரை மட்டுமல்ல இந்தியப்படையினரையும் அச்சுறுத்தி இருந்தது.அப்போதைய காலகட்டத்திலேயெ புலிகளால் நவீன ஆயுதங்களை அறிமுகப்படுத்தப்பட்டது என்றால் தற்போதைய காலகட்டத்தில்.... அதை விரிவாக பார்ப்போம்


கடந்த 2002 சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட பின் புலிகளால் பலதரப்பட்ட நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.ஆனால் அவற்றில் சிலவற்றையே களத்தின் தன்மைக்கு ஏற்ப புலிகளால் பயன்படுத்த பட்டுள்ளது.




அந்தவகையில் கடந்த 2004ம் ஆண்டு இலங்கைப்புலனாய்வுத்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் விடுதலைப்புலிகளால் அன்ரி எயார் கிறாப் எனப்படும் ஆயுதம் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.இவ்வாயுதம் தரையிலும் கடலிலும் 7000 வரையிலும் வானில் 5000 வரையிலும் துல்லியமாகவும் சுடவல்லது.

இவ்வாயுதத்தை புலிகள் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை.ஒருவேளை இதைப்புலிகள் தம் படகுகளில் பாவிப்பார்கள் எனின் அவர்கள் தான் வடக்கு கிழக்கு கடல்களில் நடமாடமுடியும்.படையினரால் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது.



மேலும் புலிகளின் கடற்படையினரின் அணியில் உள்ள டோறாப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ள பீரங்கி124mm பீரங்கி ஆனால் கடற்புலிகள் அணியில் உள்ள கப்பல்களில் 130mm பீரங்கி பொருத்தப்பட்டுள்ளது..இவற்றை ஒப்பிடுமிடத்து சூட்டு வலுவில் கடற்புலிகளே மேலோங்கிக்காணப்படுகின்றனர்.


அது கடந்த 2007 களில் நடந்த கடற்சமர்களை எடுத்துக்கொள்வோமெனில் தெளிவாக விளங்கும்.மேலும் 3ம் கட்ட ஈழப்போர்காலத்து புலிகள் தம் கனரக ஆட்லறிகளால் ஏராளமான வெற்றிகளை குவித்து இருந்தனர்.ஆட்லறிகள் மூலம் வென்ற சமர்களும் 3ம் கட்ட ஈழப்போரில் காணப்படுகின்றது.

அப்போதைய காலத்தில் படைத்தளபதிகளால் கூட புலிகளின் கனரக ஆயுத பாவனை குறித்து வியப்பாக பேசப்பட்டது.அப்போதைய புலிகளின் ஆயுதங்களில் 122mm பீரங்கி 2ம் 130mm பீரங்கி 1ம் 152mm பீரங்கி 1ம் காணப்பட்டது.ஆனால் தற்போதைய காலத்தில் புலிகளிடம் 122mm பீரங்கி 22ம் 130 பீரங்கி 6 ம் 152mm பீரங்கி 2ம் காணப்படுகின்றது.அப்போதைய காலகட்டத்து கனரக ஆயுதங்களின் பாவனையுடன் புலிகள் தற்போது 7 மடங்கு வளர்ந்துள்ளனர்.


மேலும்புலிகளின் கனரக மோட்டார்களின் பாவனை 7 மடங்காக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் சொல்லுகின்றன.
அத்துடன் நாயாற்றுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகோ திருகோணமலையில் மூழ்கடிக்கப்பட்ட 520 வழங்கள் கப்பலோ புலிகளால் எப்படி மூழ்கடிக்கப்பட்டது என்று படையினருக்கு தெரியாது.சமாதான காலத்தில் புலிகளால் கொள்முதல் செய்யப்பட்ட சீ ஸ்கூட்டர் ஆல் புலிகள் இதை மேற்கொண்டு இருப்பார்கள் என்று ச்ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



மேலும் அநுராதபுரம் மீதான எல்லாளன் நடவடிக்கையில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களை படைத்தரப்பு இதுவரை பார்த்ததில்லை.அவற்றை மேலைநாடுகளுக்கு அனுப்பியே பரிசோதித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வான்புலிகளைப்பொறுத்தவரை அவர்களின் விமானங்களோ ஆயுதங்களோ சிதம்பர ரகசியம்.



வான்புலிகள் அண்மைய திருகோணமலைத்தாக்குதலில் சக்தி வாய்ந்த மேம்படுட்தப்பட்ட குண்டுகளையே பிரயோகித்து இருந்தனர்.அவர்களிடம் உலங்கு வானூர்த்தி இருப்பதாக நம்பப்படுகின்றது.



இவ்வாயுதங்கள் அனைத்தும் காலத்துக்கும் தேவைக்கும் பொறுத்து புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டவைபடையினரைப்பொறுத்தவரை அவர்களிடம் எவ்வாறான நவீன ஆயுதங்கள் உண்டு என அனைவருக்கும் தெரியும்.ஆனால் புலிகளிடம் அப்படி அல்ல..

இவற்றைவிட புலிகளிடம் அறிய முடியாத ஏராளமான ஆயுதங்கள் உண்டு.அவை காலத்துக்கு ஏற்ப புலிகளால் அறிமுகப்படுத்தப்படும் .


Comments