சிங்களப் படைத்திமிருக்கு வன்னிப் போரங்கில் தகுந்த பாடம் புகட்டப்படும்

வன்னியில் நிலம் விழுங்கிய படி முன்னேறும் சிங்களப் படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மஹிந்த அரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

போரில் சிங்களப் படைகள் வெற்றிநடை போடுகின்றன. என்று மஹிந்த அரசு பிரகடனங்களை விடுத்து வருகிறது. என விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலெழுந்த வாரியகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மஹிந்த அரசின் வெற்றிப் பிரகடனங்களை நம்புகின்றனர்.

கண்ணால் காண்பதும் பொய் -காதால் கேட்பதும் பொய் - தீர விசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பெருந்தும். போரில் பல்வேறுவிதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து ? அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது.

வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப் புரட்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அப்போது வன்னி நிலம் சிங்களப் படைக்கு ஒரு வரலாற்றுத் தோல்வியை வழங்கும். முதிர்ச்சி பெற்ற ஒரு விடுதலைப் போராட்டத்தை இராணுவ வடிவில் அழிக்க முடியும். என்பதற்குச் சிங்கள அரசு ஒரு சாட்சியாக இருக்கப் போகின்றதென்று சில ஆக்கிரமிப்பு வாதிகள் கனவு காண்கின்றனர்.

ஆனால் ஒரு ஆக்கிரமிப்பு அரசை புலிகளைப் போன்ற ஒரு பலம் வாய்ந்த விடுதலைச் சேனை வெற்றி கொண்டு விடுதலைபெற முடியுமென்ற முன்னுதாரணத்தையே வன்னிப் போர்க்களம் நிரூபிக்கப் போகின்றது.

புலிகள் இயக்கம் தமிழரின் பேராதரவு பெற்ற விடுதலைச் சேனைஇ மரபுப் போரிலும் - கெரில்லாத் தாக்குதலிகளிலும் வல்லமை பெற்ற ஒரு அரசியல் - இராணுவ அமைப்பு.

சமூகக் கட்டமைப்புக்களையும் இயக்கியபடி ? போரையும் எதிர்கொண்டபடி ? மக்களின் இடர்நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ளும் பன்முக ஆற்றல் கொண்ட ஒரு அரசாகவே புலிகள் அமைப்பின் செயற்பாடு உள்ளது.

தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கி அடிபணிய வைக்கும் ஆக்கிரமிப்பு ஆசையுடன் - வான்தாக்கதல்களை ? எறிகணைத் தாக்குதல்களை நடாத்துகின்றது. இராணு ஆக்கிரமிப்பு பகுதிக்குள் வந்து பாதுகாப்புத் தேடும்படி மக்களுக்கு பாசாங்கு காட்டுகின்றது.

இனிவரும் மாதங்கள் போர்கள மாற்றங்களக்குரிய காலங்களாகவே இருக்கப் போகின்றன. வீரமும் - தியாகமும் - உழைப்பும் தான் தமிழினத்திற்கு வெற்றிகளைப் பெற்றத்தரும்.

தமிழரின் முப்படையும் இணைந்து சிங்களத்தின் இராணுவத் திமிருக்குப் தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகுதெலைவிலில்லை.

இந்த இராணுவ வெற்றியை ஈட்டுவதற்கு எமது விடுதலை வீரர்களுடன் மக்களும் தயார் நிலையிலுள்ளனர்.

வன்னிப் போரரங்கில் சிங்களப் படைகள் சந்திக்கப் போகும் படுதோல்வியானது அதன் ஆக்கிரமிப்பு எண்ணத்திற்கு நிரந்தரத் சாட்டையடியாகவே விழப்போகின்றது.

இதன்மூலம் புலிகள் இயக்கம் அசைக்க முடியாத தனது இராணுவப் பலத்தை நிரூபித்து விடுதலைப் போராட்த்தின் உயர் பரிமானத்தை வெளயிப்படுத்தும்.

எனவே எதிர்வரும் நாட்களில் வன்னிப் போர்க்களத்தில் சிங்களப் படைகளுக்குப் போரழிவு காத்திருக்கிறது.

'தமிழரின் இனப்பிரச்சனையை இராணுவ வழியில் தீர்க்க முடியும், புலிகள் இயக்கத்தை அழிக்க முடியும்' என்ற பேரினவாதிகளின் ஆசைகளும் - கனவுகளும் வன்னிப் பேரரங்கில் வைத்துக் சிதறடிக்கப்படும் நாட்கள் வெகுதூரத்திலில்லை.


Comments