வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்

வன்னிக் கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் மற்றும் தரைவழி தாக்குதல்களில் சிறீலங்கா படையினருக்கு சொந்தமான இரு வானூர்திகள் சேதடைந்துள்ளன. இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடர் தொகுதிகள் முற்றாக அழிந்து போயுள்ளதாகத் தெரியவருகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவலிலன்படி அதிகாலை 2.30 மணியளவில் விடுதலைப் புலிகளினால் மூன்று முனைகளிலிருந்து ஏவப்பட்ட 70 ஆட்டிலறி எறிகணைகள் வன்னி இராணுவத் தலைமையக இலக்குள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.

வன்னி இராணுவத் தலைமையக் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்தியா, சிறிலங்காவுக்கு கொடுத்திருந்த ராடர் கருவி அழிந்துள்ளதாகவும், மேற்படி ராடர் கருவியை இயக்க கடமையில் இருந்த இந்திய அதிகாரிகள் இருவர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும், சிறி லங்கா கடற்படை புலனாய்வுப்பிரிவினரின் தகவல்களை ஆதாரமாக வைத்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்களின் பிரகாரம் வான் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா விமானப்படை அகத்தின் பொறியியல் அறையில் வான்புலிகளின் விமானக் குண்டுகள் விழுந்து வெடித்ததாகவும், அதேவேளை சிறிலங்கா இராணுவ தலைமையகத்திலும் துல்லியமாகவே குண்டுகள் விழுந்துள்ளதாகவும், இந்த குண்டு வீழ்ந்ததிலும் இராணுவ தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.

இதேவேளை சிறீலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்றை முல்லைத்தீவின் காட்டுப்பகுதி ஒன்றினுள் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி வீழ்ந்ததாக ராடர்களில் எதுவும் பதியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையினரின் வன்னிக் கூட்டுப்படைத் தலைமையகமான ஜோசம் முகாம் மீது விடுதலைப் புலிகளால் வான்வழி, தரை வழி மற்றும்ஆட்டிலறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் ஜோசப் படைமுகாம் மீது நான்கு குண்டுகளை வீசியதையடுத்து, இப் படைமுகாம் மீது விடுதலைப் புலிகளால் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களும் தொடுக்க தரைவழியாகச் சென்ற கரும்புலி அணி தாக்குதலைத் தொடுத்துள்ளது. இத்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 23 படையினர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 9 தரைப் படையினரும், ஒரு காவல்துறையினரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.26 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் சிறீலங்கா வான்படையினரின் ராடர் திரைகளில் தென்பட்டுள்ளன. கட்டுநாயக்காவிலிருந்து சிறீலங்கா வான்படையினரின் மிகையொலி விமானங்கள் புறப்பட்டு வருவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகளிலிருந்து நான்கு குண்டுகள் வன்னிக் கூட்டுப்படைத் தலைமையகம் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வவுனியா படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகளால் கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்கள் தொடுத்துள்ளனர். படையினரின் முக்கிய இலக்குகள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் அணி ஒன்றும் இப்படைத் தளத்தினுள் ஊடுருவித் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

இதனையடுத்து படைத் தளத்தினுள் இரு மணிநேரத்திற்கு மேலாக சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

குண்டுகள் வெடிப்புச் சத்தங்களும், துப்பாக்கிப் சத்தங்களும் தொடர்ந்து செவிமடுக்கப்பட்டுள்ளன வவுனியா குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேநேரம் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து சிறீலங்காப் படையினரால் வான்நோக்கித் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்கப்பட்டுள்ளன. இதனால் வவுனியா நகர் வேடியோசைகளால் அதிர்ந்ததோடு, பொதுமக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடன் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர்.

இன்றைய தாக்குதலில்11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 23 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்னர். படைமுகாமிற்கு அருகில் உள்ள வீடுகளில்உள்ள 5 பொதுமக்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகி வவுனியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த படையினர் மேலதிக சிகிற்சைக்காக அநுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட இந்திரா என்ற ராடார் கண்காணிப்பு நிலையம் மீதே விடுதலைப் புலிகளால் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திரா என்ற ராடார் கருவியை இயக்கி இந்தியத் தொழிநுட்பவியாளர்கள் இருவர் காயமடைந்துள்ளார். காயமைடைந்த இவர்கள் உலங்கு வானூர்தி மூலம் மேலதிக சிகிற்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேநேரம் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் 10 உடலங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இராணுவத் தலைமையகத்தினுள் படையினருக்குப் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி வவுனியா கூட்டுப்படைத் தளத்தினுள் தரித்து நின்ற இரு வானூர்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்திரா என்ற ராடார் கருவி முற்றாக அழிவுற்றதாகவும், இராணுவத் தலைமையகம் மற்றும் விமான நிலையத்தின் பொறியியல் பகுதியிலும் வானூர்திக் குண்டுகள் துல்லியமாக வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments