![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihQbifch11RqF3gt77pktYCxIEgCR6m_p0jmt0KXsD29TNwWTwdxyasjYHuuawwxi_rijmcz76TWJh6dfBnWVIGLzdUfea4SJfuS6P0ahvWijsmaf-mf7Zo2ANtyfBJ2CKfSdGLRIV_deX/s400/supavee_1.jpg)
ஆயுதங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசு அதிகாரிகளையும் அங்கு அனுப்பி பயிற்சி கொடுத்து தமிழின அழிப்புக்கு துணைபோவது வெட்டவெளிச்சமாகி உள்ளது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (09.09.08) நடைபெற்றுள்ள வான் புலிகளின் தாக்குதலில் இரண்டு இந்திய அதிகாரிகள்
காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிசெய்துள்ளது. எனவே, ஆயுதங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசு அதிகாரிகளையும் அங்கு அனுப்பி பயிற்சி கொடுத்து தமிழின அழிப்புக்கு துணை போவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
இந்தக் கொடுமையை தமிழக மக்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
எனவே சிங்கள இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவிக்கொண்டிருப்பதை திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழின அழிப்புச் செயலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பேரவை வலியுறுத்துகின்றது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments