சிங்களத்தின் கொன்று ஆட்டத்திற்கு எதிராக கனடாத் தமிழ் மகளிர் அமைப்பு நடாத்தும் கவனஈர்ப்புப் போராட்டம்
Toronto Harbourfront Centre இல் எதிர் வரும் சனிக்கிழமை
காலை 10:00 மணிமுதல் இரவு 11:00 மணிவரையும்
ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் விமரிசையாக கொண்டாடவுள்ளனர்.
இவர்கள் இலங்கைத்தீவில் மற்றுமொரு பகுதியில் வாழும் எம் மக்களின் மரணத்துள் வாழும் வாழ்வை மூடி மறைத்து சிறிலங்காவை அமைதியான அழகிய கலாச்சார வளமுள்ள தீவு என உலகிற்கு எடுத்துக்க காட்டும் முயற்சியாகவே இக்கொண்டாட்டங்கள் திகழ்கின்றன.
இலங்கைத்தீவில், தமிழீழ தாயகத்தில் சிங்கள பேரினவாத சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளால் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, நோய்களுக்கு மருந்தின்றி, கல்வி வசதிகளின்றி, இழக்கவென இனி எதுவுமேயின்றி, வாழ்வையும் நம்பிக்கைகளையும் தொலைத்து, தெருவோரங்களை தம் வாழ்விடமாக்கி, குண்டுமழைமத்தியில் மரணத்தோடு சதிராடி, சொல்லொணாத்துயருற்று, சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்பட்டு வாழும் எம் தாயகஉறவுகளின் அவலவாழ்வை கனடாவாழ் வேற்றின உறவுகளிற்கு மனதில் உறையும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டிய மாபெரும் பணி கனடா வாழ் தமிழ் மக்களுக்கு உள்ளது.
அந்தவகையில் எம்மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்லுமுகமாக எதிர் வரும்
சனிக்கிழமை (செப்டம்பர் 20),
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) ஆகிய இரு தினங்களிலும்
பி.ப. 3:00 மணி முதல் பி.ப. 6:00 மணிவரை
மாபெரும் பாதையோர அமைதிவழி கவனஈர்ப்புப் போராட்டத்தினை ரொரன்ரோ மாநகரின் மத்தியிலுள்ள
Union Station அருகிலுள்ள Front St W, Bay St, Yong St, Spadina Ave, Lakeshore Blvd, Quees Quay Road
வீதிகளிற்கருகாமையிலுள்ள நகரின் பிரதான சந்திப்புகளில் நடாத்த கனடாத் தமிழ் மகளிர் தீர்மானித்துள்ளனர்.
கனடாவாழ் தமிழீழ தேசிய மாந்தர் யாவரும் இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் இக்காலகட்டத்திற்குரிய முக்கிய வரலாற்றுப் பணியினை ஆற்ற முடியும்.
அன்புறவுகள் Union Station Subway க்கு முன்னால் வருகை தரின் அங்கிருந்து வழிநடத்தப்பட்டு மேற்கூறிய வௌ;வேறு சந்திப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
எம்மக்களுக்கு என உதவ உலகின் எந்தவொரு தேசமும் முன் வராத நிலையில் “எம்மக்களுக்கு என என்றுமே நாங்கள் உள்ளோம்” என்பதை உரத்துச்சொல்ல கனடாவில் அனைத்து மாநகரங்களிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் எழுகை பூண்டு அணிதிரண்டு வருமாறு பணிவன்போடு வேண்டுகின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு கனடாத் தமிழ் மகளிருடன் தொடர்பு கொள்ளவும்
ரொரன்ரோ: 416-956-1338
மிசிசாகா: 416-627-8644
ஸ்காபுரோ: 647-637-4803
மார்க்கம்: 905-554-2496
இனியொரு உறவின் உயிர் துறக்குமுன் உரத்தொலிக்கட்டும் எம் குரல்கள்!
Comments