ஈழத் தமிழர்களையும் தமிழக கடற்றொழிலாளர்களையும் காத்திட வலியுறுத்தி திருச்சியில் உண்ணாநிலை போராட்டம்

தமிழ்நாடு திருச்சியில் ஈழத் தமிழர்களையும் தமிழக கடற்றொழிலாளர்களையும் காத்திட வலியுறுத்தி அனைத்து சட்டக் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளின் ஆதரவுடன் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.





திருச்சி தொடருந்து நிலையம் அருகில் கடந்த வியாழக்கிழமை (18.09.08) முற்பகல் 10:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Comments