அமெரிக்காவுக்கு வருகை தரும் மகிந்தவை எதிர்த்து ஐ.நா. முன்பாக கண்டனப் பேரணி

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதற்காக எதிர்வரும் புதன்கிழமை (24.09.08) நியூயோர்க் நகருக்கு வருகை தரவுள்ளார்.

இது தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:

தமிழர் தாயகத்தில் கொடிய தமிழின அழிப்பை நிகழ்த்தி வரும் முதன்மைப் போர்க்குற்றவாளி, உலக மனச்சாட்சியை ஏமாற்றுவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு வரவுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்" அமைப்பு தமிழர்கள் நியூயோர்க் நகரில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு அனுமதி பெற்று ஒழுங்கு செய்துள்ளனர்.



எதிர்வரும் புதன்கிழமை(24.09.08) முற்பகல் 9:30 நிமிடம் முதல் பிற்பகல் 2:30 நிமிடம் வரைக்கும் நியூயோர்க் மாநகரில் முதலாம் அவென்யூவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக கூடி நமது எதிர்ப்பைப் பறைசாற்றுவோம்.

ராஜபக்ச வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைக் கண்டித்தும்-

வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையை வேண்டியும்

இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ரொறன்ரோவிலிருந்து பேரணிக்குப் போய்வர பயண ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. விபரங்களுக்கு தயவு செய்து வார இறுதி நாட்களில் தமிழ் வானொலி அறிவிப்புகளைக் கேளுங்கள்.

உலக உதவி நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு, தமிழ் மக்களைக் கொன்றொழித்து மிகப்பெரிய இனச் சுத்திகரிப்புக்கு ஆயத்தமாகி வரும் மகிந்தவைக் கண்டிக்கவும், இந்த உலகத்திற்கு உண்மை நிலவரத்தை உணர்த்தவும் தமிழர்கள் எல்லோரும் திரண்டு வாருங்கள்.

நமது மக்களின் அவலங்களை நாம் தான் இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனடாவிலிருந்து செல்வதற்கு வாகனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன அது பற்றி வானொலிகள், தொலைக்காட்சிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்




Comments