வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தள மையத்தில் கதுவீ (ராடர்) நிலையம் அழிப்பு மற்றும் படைத்தள அழிப்பு நடவடிக்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
பிரத்தியேகமாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமையகத்துக்குள் ஊடுருவி சிங்கள படைகளின் அதிஉயர் கதுவீ (ராடர்) கண்காணிப்பு நிலையத்தை அழிப்பு நடவடிக்கையில் வான்புலிகள், கேணல் கிட்டு பீரங்கிப்படை ஆகியவற்றினை இணைத்து படைத்தளத்துக்கு பேரழிவை ஏற்படுத்தி சிங்களப் படைத்தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வெற்றிகரமான நடவடிக்கையில்
கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
கரும்புலி மேஜர் ஆனந்தி
கரும்புலி கப்டன் கனிமதி
கரும்புலி கப்டன் முத்துநகை
கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
கரும்புலி மேஜர் நிலாகரன்
கரும்புலி கப்டன் எழிலகன்
கரும்புலி கப்டன் அகிலன்
கரும்புலி கப்டன் நிமலன்
ஆகிய கரும்புல வீரர்கள் வீரகாவியமாகினர்.
இந்த கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி மாலைகளைச் சூட்டி வீரவணக்கத்தை செலுத்தியுள்ளார்.
Comments