இலங்கை ராணுவத்தை கண்டித்து ரயில் மறியல்: கி.வீரமணி-திருமா கைது


இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும், கச்சத்தீைவ திரும்பப் பெறக் கோரியும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும், கச்சத்தீவை திரும்பப் பெறக் கோரியும் ரயில்மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அங்கிருந்து சென்டிரல் ரயில் நிலையம் நோக்கி அவர்கள் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக கிளம்பினர்.


இதையடுத்து கி.வீரமணி, தொல்.திருமாவளவன், இயக்குநர் சீமான். பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

பெரியார் திடலிருந்து பேரணி புறப்பட இருந்தபோதும் தமிழின உணர்வாளர்களின் அதிகமாக குவிந்ததால் பேரணில் முன்னெடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை சென்றல் தொடரூந்து நிலையத்தின் மறியல் போராட்டத்திற்கு தமிழகக் காவல்துறையினர் தடைவித்த போதும் தடையை மீறி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதால் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Comments

SurveySan said…
கைதாயாச்சா அதுக்குள்ள.

உங்க ப்ரச்சனையெல்லாம் தீந்துடுச்சா?

:(