குரும்பட்டி மெஷின் எனக் கேலிசெய்யப்பட்ட புலிகளின் விமானம் ஆறாவது தாக்குதலையும் நடத்தியது!

புலிகள் இயக்கத்தின் விமானப் பிரிவினரால் கடந்த 28 ஆம் திகதி கிழக்குப் பிராந்திய கடற்படையினரின் தலைமையகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் புலிகள் இயக்கம் மேற்கொண்ட ஆறாவது விமானத் தாக்குதல் ஆகும்.

இதற்கு முன்னர் கட்டுநாயக்க விமானப்படை முகாம்,யாழ்ப்பாணம் மயிலிட்டி முகாம்,பலாலி முகாம், கொழும்பு கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எண்ணெய் மற்றும் எரிவாயு களஞ்சியங்கள்,அனுராதபுரம் விமானப்படைமுகாம்,வெலிஓய இராணுவ பாதுகாப்பு முன்னரண் ஆகிய நிலையங்கள் மீது வான்புலிகள் விமானப்படைப்பிரிவினர் விமானக்குண்டு வீச்சுகளை நடத்தியிருந்தனர்.

தற்போது திருகோணமலை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள கடற்படைத்தலைமையகத்தை இலக்குவைத்துப்புலிகள்நடத்தியவிமானத்தாக்குதலால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படாவிட்டாலும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏனைய விமானத்தாக்குதல்களைப் பாதுகாப்பு ரீதியில் பெரிதாகக் கருதாதது போலவே இதனையும் கருதி கைவிட்டுவிடக்கூடாது.

ஏனெனில் புலிகள் மேற்கொண்ட இந்த விமானக் குண்டு குண்டுவீச்சுகளுக்கு ஐந்து கடற்படையினர் நேரடியாகவே இலக்காகி உயிரிழந்திருப்பதுடன் 30படையினர் கடும் காயங்களுக்குக் குள்ளாகினர்.

எனவே கடற்படைதலைமையகத்தை நோக்கிப் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் இலக்குத் தவறியது என்று கருதிவிட முடியாது.இவ்வாறு புலிகள்இயக்கத்தின் விமானம் முதற்தடவையில் நான்கு குண்டுகளை கடற்படைத்தலைமையகம் நோக்கி வீசியுள்ளன.

இவற்றில் மூன்று குண்டுகள் கடற்படையினர் கூடுதலாகச் செயற்படும் நிலையம் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலேயே விழுந்துள்ளன. இவற்றில் இரண்டு வெடித்ததுடன் ஒன்று வெடிக்காமலே சிதறியுள்ளது.இந்தக்குண்டு வீச்சில் மூன்று கடற்படையினர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.இது சம்பவதினம் முதலாவது தடவையாக புலிகள் இயக்கத்தினரின் விமானம் மேற்கொண்ட தாக்கதலாகும்.

அன்று இரண்டாவது தடவையும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலின்போது வீசப்பட்ட குண்டுகள் கடற்படையினரின் உணவுச்சாலை மற்றும் ஓய்வுவிடுதி அமைந்துள்ள கட்டடத்தில் விழுந்து வெடித்துள்ளன.


இதில் இரண்டு கடற்படையினர் உயிரிழந்ததுடன் சிலர் காயங்களுக்குள்ளாகினர்.இந்த இரண்டு விமானத் தாக்குதல்களின்போதும் படையினரின் செயற்பாட்டு நிலையம் மற்றும் ஓய்வுவிடுதி அமைந்துள்ள இரண்டு கட்டடங்களின் கூரைகளும் சில கொங்றீற் சுவர்களும் சேதங்களுக்குள்ளாகின.எவ்வாறாயினும் கடற்படைத் தலைமையகத்தை அண்டி நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களுக்கோ அல்லது டோறாபடகுகளுக்கோ சேதம் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் பற்றி கடற்படை தரப்பிலான பாதுகாப்புத் தகவல்கள் எவ்வாறிருப்பினும் கடற்படைத் தலைமையகத்தை இலக்கு வைத்து புலிகள் இயக்கம் மேற்கொண்ட இந்த விமானத் தாக்குதல்களும் அவர்கள் எதிர்பார்த்தது போல் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தவில்லை.புலிகள் இயக்கம் பயன்படுத்தும் இந்த விமானத்தில் ஒரு தடவையில் நான்கு விமானக்குண்டுகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.புலிகள் பயன்படுத்தும் இசற் 143 வகை சிலின் விமானங்களே உலகில் சிறந்த கரணமடிப்பு விமானங்கள் ஆகும்.

சிறிய விமானமாக இருந்தாலும் அவ்வாறே குறைந்தஎண்ணிக்கையிலான குண்டுகளையே ஏற்றிச்செல்லக்கூடியனவாக இருந்தாலும் இந்தசிலின் விமானங்கள் கரணமடிப்பதில் விசேடசெயற்பாட்டைக் கொண்டவையாகும்.

இந்தவகையில்சிலின்விமானங்கள்பெரும்தாக்குதல்களுக்குப்பயன்படுத்தக்கூடியவைஇல்லை.எவ்வாறாயினும் புலிகள் இயக்க விமானப்பிரிவினர் இந்த சிலின் விமானங்களையே ஒரு சில இயக்க மாற்றங்களைச் செய்துவிட்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்துகின்றனர்.

கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு நவீன ராடர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையிலும்,விமான அழிப்பு ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆகாயப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும் புலிகள் விமானங்கள் இவ்வாறு திருகோணமலை வான்பரப்புக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தியிருப்பது பாரதூரமான பாதுகாப்புப் பிரச்சினையாகும்.

இது சம்பந்தமாகத் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்க விமானப்பிரிவினர் வானிலை மற்றும் பருவகாலம் பார்த்தே இந்த தாக்குதல்களுக்கான தினத்தையும் நேரத்தையும் தெரிந்தெடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.இவ்வாறு மழைகாலத்தையும் மழை முகில் மூடிக்கிடக்கும் வான்நிலையையும் சந்தர்ப்பமாகக் கொண்டே புலிகள் இயக்கம் இந்த விமானத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதல் பற்றிய மேலதிக தகவல்களுக்கேற்ப இவ்வாறு புலிகளின் இரண்டு சிலின் விமானங்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் விமானப்பாதையொன்றிலிருந்து வானத்தில் மேலெழுந்ததாகவும் அவற்றில் ஒரு விமானமே திருகோணமலை கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும்

மற்றொரு,சிலின் விமானம்தாக்குதல்விமானத்துக்குப் பாதுகாப்பளிப்பதற்காக வான் பகுதியில் பரந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இவ்வாறு தாக்குதலை நடத்திய புலிகளின் சிலின் விமானம் மீண்டும் முல்லைத்தீவுப் பகுதியிலுள்ள ஓடுபாதை நிலையம் ஒன்றில் இறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அந்த ஓடுபாதை அமைந்திருக்கும் இடத்தை விமானப்படையினர் கண்டு பிடிக்க முடியாதிருப்பதும் பாரதூரமான பாதுகாப்புப் பிரச்சினையாகும்.

இந்த நிலையத்தைக்கண்டு பிடிப்பதற்காக விமானப்படையின் எவ்.7 உட்பட தேடுதல் விமானங்கள் அப்பகுதிகளை நோட்டமிட்டபோதும் உறுதியான தகவல் எதுவும் பெறப்படவில்லை.புலிகள் இயக்கத்தின் விமான ஓடுபாதை நிலையங்கள் முல்லைத்தீவு இரணைமடு குளத்தை அண்டிய காட்டுப்பிரதேசத்திலும்,மற்றும் முள்ளியவளை பிரதேசத்திலும் அமைந்திருந்ததாக முன்னர் விமாப்படையின் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தெரிவித்திருந்ததுடன் தொடர்ந்து பலதடவைகள் விமானத்தாக்குதல்கள் மூலம் குறித்த ஓடுபாதைப்பகுதிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவையெல்லாம் சிறிய சிலின் விமானங்கள் நிறுத்தவோ,ஏறவோ இறங்ககோ தேவைக்கு மிஞ்சிய பரந்த இடங்களாகும்.குறித்த இஸட் 143சிலின் விமானங்கள் செயற்படுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அவற்றை விடச் சிறிய பரப்பிலான தரைப்பகுதி போதுமானதாகும். எனவே மேற்படி இரணைமடு,முள்ளியவளை தவிர்ந்த 3ஆவது விமான ஓடு பாதையை புலிகள் இயக்கம் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் எங்கோ ஒருபகுதியில் அமைத்திருக்கக்கூடும்.

புலிகள் இயக்கம் இந்த சிலின் விமானங்கள் மூலம் முன்னர் தாக்குதல்களை மேற்கொண்டதொரு சந்தர்ப்பத்தில் அப்போது மக்கள் விடுதலைமுன்னணியின் பிரசார செயலாளராக இருந்த விமல் வீரவன்ச சிலின் விமானத்தை குரும்பட்டி மெஷின் என்று கேலியாகக் கூறியிருந்தார்.ஆனால் இந்த குரும்பட்டி மெஷின் ஆறாவது தடவையாகவும் வானத்தில் கரணமடித்து வந்து திருகோணமலைகடற்படைத்தலைமையகம் மீது குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளது.

இவ்வாறு முப்படையினரினதும் உயர் பாதுகாப்பிலுள்ள பிரதேசம் மீது பறந்துவந்த புலிகளின் சிறிய விமானம் மீது பதில் தாக்குதல் நடத்தவோ அல்லது தப்பியோடியபோது துரத்திச்சென்று தாக்குதலை நடத்தவோ விமானப்படை தரப்புக்கு முடியாமல் போனதையிட்டு தற்போது பரந்த அளவிலானவிசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Comments