தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT), இணையம் வழியாக தனது ஒளிபரப்பினைத் தொடங்கியது


தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒளி ஊடகமான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT) நேற்று வெள்ளிக்கிழமை முதல் இணையம் வழியாக தனது ஒளிபரப்பினைத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் நாள் தமிழீழ தேசிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

சிறிலங்கா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரை தாயக மக்களின் அவலங்களை மற்றும் வாழ்வியலை காட்சி வெளிப்பாடாக கொணர்ந்து சேர்ப்பதில் தமிழீழத் தேசிய தொலைக்காட்சி பெரும் பங்காற்றி வருகின்றது.

பலத்த சிரமங்களில் மத்தியில் தனது சிறப்பான சேவையை வழங்கி வரும் தமிழீழத் தேசிய தொலைக்காடசின் ஒளிபரப்பை முடக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றது.

இருந்த போதிலும் இன்றும் பல நாடுகளில் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த வகையில் தற்போது தமிழீழத் தேசிய தொலைக்காட்சி www.tamilntt.com எனும் முகவரியின் ஊடாக இணையத்தில் காலடி வைத்துள்ளது.

இதன் மூலம் இணைய வழியாக வரும் ஒளிபரப்பினை தாம் விரும்பிய நேரத்தில் பார்க்கக்கூடியவாறு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் இணைய தொழில்நுட்பப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


Comments