இந்திய - சிறிலங்கா கூட்டுச் சதியில் பலியான 12 வேங்கைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு


இந்திய - சிறிலங்கா அரசுகளின் கூட்டுச்சதியில் வீரச்சாவைத்தழுவிய லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார்.
பன்னிரு வேங்கைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிரேத்தியகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.



இதில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பங்கேற்று பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளும் பங்கேற்று வணக்கம் செலுத்தியுள்ளனர்.



Comments