ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒக். 14 இல் அனைத்து கட்சிக்கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக்கூட்டத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.10.08) தமிழ்நாடு அரசு கூட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும்- நிலையான அமைதி அங்கே உருவாகிடத் தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்- அங்கே இனப்படுகொலையும்- போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்ள தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் ஒக்ரோபர் 14 ஆம் நாள் மாலை 4:30 நிமிடத்துக்கு தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments