ஈழத் தமிழர்களுக்காக திருச்சி சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்

திருச்சி: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1450 கைதிகளும் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தமிழர்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1000 ஆண் கைதிகளும், 450 பெண் கைதிகளும் கலந்து கொண்டனர்.

Comments