![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqyiE8eLXLYAgspErEpg0nEmfNoMis6CzNmUFU2CJJLBBsqHGun6q9Aup9yc-cylqWzNPqsJDuPnut6Iz8vEEiYFY9PxzflHmAh8oKerXhU9yZWacZAciBLU9bl54tVPo1MRLrHdBpKjUf/s400/chennai_20081021001.jpg)
சிறிலங்காவுக்கு இந்திய அரசு அளித்து வரும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மெமோரியல் அரங்கம் பகுதியில் அதன் மாவட்ட அமைப்பாளர் வ.டேவிட் செல்லப்பா தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கண்டன உரைகளை ஞானம், மனோகரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJo0pb__mHyOVCOKqVKNnXA32xeoD5EMhzH1CakblGixhy_VeQbpHMdQWg8WW1ii1YOBNdiQPDZMLn-glFqDGG12TZbme3qcEJbWTcYBaj7meV6TXOMCUwOMOSBZDnn2TE-9V7cPC1zdz9/s400/chennai_20081021002.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUuueSz7Bz_r9APle7eEU1xUT3oTibZGQl8-KRbvVLAXeNIt0d1JjwTHVC2P-CKBzO7ixJ8_e22rcwDYLAFzeRiQnIlgQ2jkijTKtjXqQIRfsoFWjr0G4lAdZ6VQ46LKfaW-X0IuJ47w2y/s400/chennai_20081021003.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivF7BI_5z_NpXqD6wi9QqpyFXRC0KSEzf3mLavzTbnxZQ6etGFgpIrD3v9MFyQruTq4_GkfpRHMm6XruVvSxO2fD3Klix0TYRqQ27krdbgJKkwbc-U5z1HIMswFaAsP2mahAVP8u4NpB8Q/s400/chennai_20081021004.jpg)
சிறிலங்கா அரசே!
ஈழத் தமிழரின் மீதான இனவெறி போரை உடனே நிறுத்து!
தமிழீழப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை உடனே திரும்பப் பெறு
இந்திய அரசே!
ஈழத் தமிழரின் தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமையை அங்கீகரி!
இனவெறி போரால் அவதியுறும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு, மருத்துவ நிவாரண உதவிகளை உடனே வழங்கு!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்!
சிறிலங்காவின் தாக்குதல்களிலிருந்து தற்காத்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கு!
என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Comments