தமிழர் போராட்டத்திற்கு எதிராக கொழும்பில் கைகோர்க்கும் துரோகிகள்

கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகள் அரசியல், நிர்வாக, இராணுவ நடவடிக்கைகள் ஆம்பிக்கப்பட்டிருக்கும் வேளையில் இராணுவத்திற்கு எதிரான பாரிய நடவடிககையில் ஈடுபடுவதற்கு முன்னர் இராணுவத்தினருக்கு துணையாகயுள்ளவர்களை அகற்றுவதில் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் முடிக்கிவிட்டுள்ளனர்.

கொழும்பில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான இரு துரோகிககள் கைகோர்க்கின்றனர். இந்த இரு குழுக்களின் கைகுலாவல் கொழும்பில் உள்ள தமிழர்களை ஒடுக்குவதற்காகவா? அல்லது விடுதலை புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காகவா? அல்லது மஹிந்த அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் பிள்ளையாளை ஒரம் கட்டுவதற்காகவா? இதில் விடுதலை புலிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்துவது என்பது எளிதான விடயம் அல்ல ஆனால் தற்போது கருணா, பிள்ளையான் என இரு குழுக்களாக பிரிந்தள்ள நிலையில் பிள்ளையானை ஒரம் கட்டுவதற்காகவே தமிழர்களின் ஏககால துரோகியான டக்ளஸ்யுடனான கூட்டாகும்.

அம்பாறை, திருகோணமலை, இரு மாவட்டங்களிலும் துணைக்குழுக்கள் செயற்பட்டுவந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள், மற்றும் அவர்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இரு மாவட்டங்களையும் விட மட்டக்களப்பு மாவட்டம் புலிகளின் செயற்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது.

இதனால் மட்டக்களப்பை முதல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதனுடாக ஏனைய இரண்டையும் விரைவாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும் என்பது விடுதலை புலிகளின் கனிப்பாக இருக்கலாம். எழுவான்கரையில் புலிகளின் பிஸ்டல் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவர படுவான்கரை பக்கம் கனரக ஆயுதங்களுடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தாக்கியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஞாயிறு அதிகாலை படுவான்கரை திகிலிவெட்;டை பகுதியில் அமைந்துள்ள பிள்ளையான் குழு அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகியது. மாவட்டங்களில் அமைந்துள்ள ஆயுதக்குழுக்களின் அனைத்து அலுவலகத்திற்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கிவருகின்ற நிலையில் புலிகள் பாரியளவிலான தாக்குதலை மேற்கொண்டுவருகின்றனர்.

தாக்குதலின் போது காவல் பணியில் ஈடுபட்ட இராணுவம் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களினதும், அலுவலத்திலுள்ள ரி-56 ரக துப்பாக்கிகள் -05, பி.கே எல்.எம்.ஜி -1, பி.கே ரவைக்கூடு-01, பிகே எல்.எம்.ஜி ரவைகள்-100, ஏகே ரவைக்கூடு-09 ஏகே ரவைகள்-200, கோல்சர்-01 போன்ற ஆயுதங்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

தாக்கியழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் அதேவேளை நகர் பகுதிகளில் புலிகளின் பிஸ்டல் குழுவினர்கள் தமது நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தன்னாமுனை, மற்றும் மட்டு நகர்ப் பகுதிகளில் இரு உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

புல்லூருவிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே தமது இலக்குகளை இலகுவாக அடைய முடியும் என்பது புலிகளின் தாரகமந்திரம். எதிரியை விரைவில் தோற்கடிப்பதற்கு முதலில் துரோகியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது கணிப்பு. இதேவேளை ஒட்டுக்குழுவினரிடையே ஏற்பட்டுள்ள பிளவு விடுதலை புலிகளின் தாக்குதல் நடவடிக்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
விடுதலை புலிகளின் அமைப்பிலிருந்து கருணா விலகிய போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் அக்குழுவினருள் ஊடுருவினர். இதனால் அப்போது கொழும்பு கொட்டாவ, தீவுச்சேனை, போன்ற இடங்களில் பல தாக்குதல் சம்வங்கள் இடம்பெற்றும் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வாறே தற்போதும் கருணா குழு, பிள்ளையான் குழு என இரு பிரிவு ஏற்பட்டுள்ளமை விடுதலை புலிகளின் தாக்குதலைகள் அதிகரிப்பதற்கு ஏற்ற தகவல்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

பிள்ளையான் குழுவின் சில உறுப்பினர்கள் விடுதலை புலிகளுக்கு தகவல்களை வழங்குவதாக கருணா நேரடியாக குற்றம் சாட்டிருந்தார். இந்த தகவலில் எவ்விதம் உண்மை உள்ளது என்பது மயக்கமாக இருக்கலாம். தற்போது கருணாவுக்கு கௌரவ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்த காலகட்டத்தில் தனக்கு கீழ் பணிபுரிந்த பிள்ளையான் தற்போது முதல் அமைச்சர் பட்டத்துடன் செயல்பட தான் வெறும் விநாயமூர்த்தி முரளிதரனாக இருப்பது சகிக்க முடியவில்லை.

மக்கள் மத்தியிலும் வரமுடியாது, இராணுவத்தின் உயர் நிலைக்கும் செல்ல முடியாத நிலையில் மிகவும் விரக்கியடைந்த நிலையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டுத்தான் கருணா-டக்ளஸ் உறவு. கிழக்கில் பிள்ளையான் குழுவினர் கருணாகுழுவினரையும், டக்ளஸ் அணியினரையும் போட்டுதள்ளும் நிலையில் இவர்களின் கூட்டு எதிர்காலத்தில் பிள்ளையான் குழுவினருக்கு பெரும் சவாலாகவே அமையக் கூடும்.

இன்னொருவிடயத்தையும் நாங்கள் கவனிக்க வேண்டும் யாழ்ப்பாணி மட்டக்களப்பானை புறக்கணிப்பதாக தெரிவித்தே விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்படத் தொடங்கிய கருணா தற்போது கூட்டுச் சேர்ந்துள்ளவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கேட்க விரும்புகின்றேன். இவர்கள் அனைவரும் தங்களின் சொந்த நலனுக்காக பாடுபடுகின்றாhகள் தவிர தமிழ் மக்களின் நலனுக்காக இல்லை.

இரு பிரிவுகளாக உள்ள தரப்பினர் மக்களை அச்சுறுத்தி என்பக்கம் உன்பக்கம் என இழுக்கின்றனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உயர் பதவி உத்தியோகஸ்த்தர்கள், கல்வி மான்கள், வைத்தியசார்கள், புத்திஜீவிகள,; ஊர் பிரமுவகர்கள், ஆகியோரை வலுக்கட்டாயத்தின் பெயரில் கருணா தரப்பிலான பொறுப்பாளர்கள் கொழும்புக்கு அழைத்துவந்தள்ளனர்.

இவர்கள் அனைவரும் கருணா தலைமையில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கருணா அணியிலான கட்சியை மேம்படுத்துவது, மட்டக்கப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்செயலானது அப்பாவி பொதுமக்களை கொல்ல கொடுக்கும் நடவடிக்கையாகும். கருணா தரப்பில் வருகை தருபவர்கள் பிள்ளையான் தரப்பிலும் வருகை தரவேண்டும் என கோரிக்கை விடுத்தால் இவர்கள் மறுப்பு தெரிவித்தால் மறுநாள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்பதுதான் உண்மை.

இவ்வாறான நடவடிக்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பல்சுவை கதம்பமாக இருக்கலாம் ஆனால் மக்களைப் பொறுத்தவரையில் அது மரணம். இதுதான் கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள நிலமை. கிழக்கில் அரசாங்கம் தமிழ் ஆயுதக்குழுக்களை வைத்துக் கொண்டு விடுதலை புலிகளை அழிப்பதற்கான இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பு செய்துவருன்றது.

அவர்களின் சொந்த இடங்களில் நிம்மதியாக வாழவிடாது நாளாந்தம் இராணுவம் கெடுபிடிகளை மக்கள் மீது திணிக்கின்றனர். கிழக்கு மக்கள் ஜனநாயகமாக வாழ்கின்றார்கள், அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டுவருவதாக அரச ஊடகங்களில் ஆளும் தரப்பினர்களினால் கொக்கரிப்பதற்கு எதிரான நடவடிக்கையே கிழக்கில் இடம்பெற்றுவருகின்றது.

விடுதலை புலிகளை அழிப்பதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம், ஒட்டுக்குழுக்கள் - சிறிலங்கா ஒப்பந்தம், தற்போது ஒட்டுக்குழுக்களிடையே ஒப்பந்தம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடும் அமைப்பு ஒன்றுக்கான இத்தனை கூட்டு ஒப்பந்தங்களிhல் கடந்த காலங்களிலும் சரி எதிர் காலங்களிலும் சரி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு விடயம் நடைபெற்றுவருகின்றது. அதாவது புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துக் கொண்டு தமிழ் இளைஞர்களை கொல்ல கொடுக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழர்க்கு அடுத்தபடியாக இருக்கம் முஸ்ஸிம் இனத்தின் விகிதசாரத்தினை அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றனர்.

-மகான்-

Comments