தள்ளாடி தரைப்படைத்தளம்- அனல் மின் உற்பத்தி நிலையம் மீது வான்புலிகள் குண்டுத்தாக்குதல்: விடுதலைப் புலிகள்

மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா தரைப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:20 நிமிடத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தள்ளாடி தரைப்படைத்தளம் பலத்த சேதமடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

அதேநேரம், சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது நேற்று இரவு 11:45 நிமிடத்துக்கு வான்புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


Comments