- பழ. நெடுமாறன்
விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னிப் பகுதி கிளி நொச்சி ஆகியவற்றைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கடந்த பல மாதங்களாக சிங்களப் படை பல்வேறு முனைகளில் படை நகர்வுகளைச் செய்து வருகிறது. இதையொட்டி சிங்கள இராணுவம் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் புலிகள் பின்வாங்குவதாகவும் விரைவில் கிளிநொச்சி கைப்பற்றப்படும் என்றும் சிங்கள அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்ட தாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இவற்றில் உண்மை என்ன? என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.
வன்னிப் பகுதியில் வாழும் மக்களை அகதிகளாக விரட்டியடித்து அவர்களின் மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சிங்களப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் புலிகள் அந்தப் படையினரை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்து வருகின்றனர் என்பதுதான் உண்மையான செய்தியாகும். மன்னாரில் இருந்து பூநகரியை நோக்கி முன்னேறிய சிங்களப்படையினர் மிகக்கடுமையான இழப்புகளை கடந்த ஒருவாரத்தில் சந்தித்துள்ளனர். நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டும் அதைவிட பன்மடங்கனாவர் படுகாயமடைந்தும் களமுனையில் இருந்து அகற்றப் பட்டுள்ளனர். அதைப்போல வெள்ளாங் குளம் பகுதியிலிருந்து முன்னேற முயன்ற சிங்களப் படையினரை விடுதலைப்புலிகள் விரட்டியடித்துள்ளனர்.
சிங்களப் படை அகலக் கால் வைப்பதும் அதனால் தோல்விகளைச் சந்திப்பதும் வரலாறாக உள்ளது என விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அறிவித்துள்ளார். கடந்த ஒருவார காலத்தில் பல்வேறு தாக்குதல் முயற்சி களில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நூற்றுக்கு மேலான சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானவர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் வழக்கம்போல் இந்த எண்ணிக்கையை சிங்கள அரசு குறைத்து கூறிவருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கு அதிகமான சிங்கள வீரர்கள் ராணுவத்திலிருந்து தப்பி யோடியுள்ளனர். எந்த நாட்டு இராணுவத்திலிருந்தும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிபவர்களை இராணுவத் தலைமை விரட்டிப்பிடிக்கும். இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை விதிக்கும். ஆனால் சிங்கள அரசு தப்பி ஓடியவர் களை திரும்ப வருமாறும் எவ்விதத் தண்டனையும் விதிக்கப்படாது என்றும் அவர்கள் படையில் இல்லாத காலத்திற்கும் ஊதியம் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கிறது. ஆனாலும் எவ்விதப் பயனும் இல்லை.
சிங்களப் படை வெற்றிமேல் வெற்றிபெறுகிறது என்று சொன்னால் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தப்பி ஓடுவது ஏன் என்ற கேள்விக்கு சிங்கள அரசினால் பதில் கூறமுடியவில்லை.
சிங்கள இராணுவத்துக்கு புதிதாக ஆள் சேர்க்கவும் மிக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் புதிதாக யாரும் படையில் சேரவும் முன்வரவில்லை. "புலிகள் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டா��
�்கள். அவர்களால் இனி மரபு வழியாகப் போரிட முடியாது" என சிங்கள இராணுவத் தளபதியும் மற்றும் சில அமைச்சர்களும் கூறிவருகின்றனர். இது உண்மை என்றால் எதற்காக புதிதாக படைவீரர்கள் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது?
மன்னாரில் சிங்கள இராணுவம் பெரும் அளவில் படைகளைக் குவித்துப் போராடி வருகிறது. இது யாழ்ப்பாணத்தில் உள்ள 40,000 சிங்களப் படையினரைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையே ஆகும். யாழ்ப்பாணத்தில் உள்ள படையினர் புலிகளின் முற்றுகைக்குள் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் பலாலி விமான தளம், காங்கேசன் துறை - துறைமுகம் அதனுடன் இணைந்த கடற்படைத் தளம், காரை நகர், நெடுந்தீவு கடற்படைத் தளங்கள், கிலாலி, நாகர்கோவில், முகமாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வலிமை வாய்ந்த படை முன்அரண்கள் இவை அனைத்தும் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ளன. இவை அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஆணையிறவும், பூநகரியும் படையினர் வசம் இருக்கவேண்டும். ஆணையிறவும் பூநகரியும் யாரிடம் இருக்கிறதோ அவர் கள் கையே யாழ்ப்பாண குடாநாட்டில் ஓங்கும். இதன்படி இப்போது ஆனை யிறவிலும், பூ.நகரியிலும் விடுதலைப்புலிகள் கால் ஊன்றி நிற்கிறார்கள். யாழ்ப் பாணக் குடாநாட்டை இவர்கள் மெல்ல மெல்ல முற்றுகையிட்டு வருகிறார்கள். எனவே யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்படை தளங்கள், விமானத் தளங்கள் மற்றும் 40,0000 படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அத்தனையும் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் ஆனையிறவையும் பூநகரியை யும் புலிகளிடமிருந்து சிங்களப்படை மீட்கவேண்டும். அந்த நோக்கத்துடன் மன்னார் பகுதியிலும் வன்னிப்பகுதியிலும் சிங்களப் படை போராடுகிறது. அவர்களை முன்னேற விடாமல் புலிகள் தடுப்பதோடு மட்டுமல்ல யாழ்ப்பாண முற்றுகையை இறுக்கி வருகிறார்கள்.
முன்பு ஆனையிறவை சிங்களப் படையிடமிருந்து புலிகள் மீட்டு யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறியபோது இந்தியாவின் காலடியில் சிங்கள அரசு விழுந்து மன்றாடியது. இந்தியாவின் தலையீட்டின் பேரில் புலிகள் தங்கள் தாக்குதல்களை நிறுத்தினார்கள். யாழ்ப் பாணத்தில் சிங்கள வீரர்கள் பெரும் பாலோர் கொல்லப்பட்டிருப்பார்கள். அதேபோன்று இப்போதும் யாழ்ப்பாணத் திலுள்ள படைவீரர்களைக் காப்பாற்றும் படி இந்திய அரசை சிங்கள அரசு வேண்டிக்கொண்டுள்ளது.
அதனால்தான் இந்தியா ராடார் சாதனங்களையும் அதனை இயக்கு வதற்கான இராணுவ அதிகாரிகளையும் அனுப்பிவைத்தது. ஆனாலும் புலிகளின் தாக்குதலின் விளைவாக அந்த ராடார் சாதனங்கள் அழிக்கப்பட்டதுடன் இந்திய அதிகாரிகளும் படுகாயமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியா ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியும் செய்து வருகிறது என்ற உண்மை அம்பலமாகி விட்டது.
சிங்கள மக்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக பொய்யான செய்திகளை வெளியிட்டு அந்த மக்களை சிங்கள அரசு ஏமாற்றி வருகிறது. அதே செய்தி களை இந்திய ஊடகங்களும் வெளி யிட்டு தமிழக மக்களைக் குழப்பி வருகின்றன.
சிங்களப் படை வெற்றிமேல் வெற்றிபெற்று வருகிறது என்று சொன்னால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சிங்களப் படைத்தளபதிகள் பதில் கூறவேண்டும்.
1. விடுதலைப்புலிகளின் வான் படை மிகமிக சிறியது. அவற்றை வைத்து இராணுவ நிலைகள் மீது பெருமளவில் தாக்குதல்களை நடத்த முடியாது என சிங்கள அரசு கூறிவருகிறது. ஆனால் அண்மையில் திரிகோணமலையில் சிங்களக் கடற்படை கிழக்குத் தலைமைத் தளத்தின் மீது வான்புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதல்களின் விளைவாக மிகப்பெரிய அழிவுகள் ஏற்பட்டன. புலிகளின் வான்படையில் உள்ள விமானங் கள் ஒன்றைக்கூட சிங்கள இராணுவத் தினால் சுட்டு வீழ்த்த முடியாதது ஏன்?
2. புலிகளிடம் இலக்கு தவறாமல் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன என சிங்கள இராணுவம் கூறியது. வடக்குப் போர்முனையில் புலிகளிடமிருந்து ஏராளமான இராணுவத் தளவாடங்களை கைப்பற்றியதாக தம்பட்டம் அடிக்கும் சிங்கள இராணுவம் இதுவரை இந்த ஏவுகணைகளில் ஒன்றையாவது கைப்பற்றியிருக்கிறதா?
3. விடுதலைப்புலிகளிடம் 3,000 கரும்புலி வீரர்கள் இருப்பதாக இராணுவம் கூறியுள்ளது. இவர்கள்தான் தங்களுக்கு பெரும் சவாலானவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது. கிழக்கு மாநிலத்தை மீட்டிருப்பதற் காகவும் வன்னிக்களத்தில் முன்னேறி வருவதாகவும் பீற்றிக்கொள்ளும் சிங்கள இராணுவம் கரும்புலிகளில் யாரயாவது - ஒருவரையாவது சுட்டு வீழ்த்தியுள்ளதா?
4. ரணில் விக்கிரமசிங்கே அரசு புலிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு கடல் வழியாக புலிகள் கப்பல் கப்பலாக ஆயுதங்களை இறக்கிவிட்டார்கள் என்று மகிந்த ராசபக்சே எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூக்குர
லிட்டார். அப்படியானால் புலிகள் குவித்திருக்கும் ஆயுதங்களில் எத்தனையை சிங்களப் படை கைப்பற்றியிருக்கிறது?
5. களமுனையில் பெரும் வெற்றி களை ஈட்டிவருவதாக சிங்கள அரசும் இராணுவத் தலைமையும் அறிவித்து வருகின்றன. ஆனால் இராணுவ நடவடிக்கை குறித்து விமர்சனக் கட்டுரைகளோ, ஆய்வுகளோ வெளியே வரவிடாமல் மறைமுக தணிக்கை ஒன்றினை சிங்கள அரசு செயல்படுத்தி வருவது ஏன்? களத்தில் வெற்றிபெற்று வருவது உண்மையானால் அதனை பகிரங்கமாக ஆய்வுசெய் அனுமதிப் பதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது?
6. கடற்புலிகளின் வலிமையை எந்த அளவுக்கு சிங்களக் கடற்படை அழித்திருக்கிறது? கடற்புலிகள் தொடர்ந்து சிங்களக் கடற்படைத் தளங்களுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறார்களே அது எப்படி?
இதுபோன்ற பல்வேறு கேள்வி களுக்கு சிங்கள அரசிடமிருந்தோ இராணுவத் தலைமையிடமிருந்தோ எத்தகைய பதிலும் இல்லை. இதுதான் அங்கு களத்தில் நிலவும் உண்மை நிலவரமாகும்.
தென்செய்தி

Comments