ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்கின்றது - தொல்.திருமாவளவன்


ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அரசியல் தீர்வு காண தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்; தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்கின்றது என்பதைக் காட்டவே இங்கு வந்துள்ளேன்.

ஈழப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும்.

சிறி லங்காவில் உள்ள ராஜபக்ஸ அரசு தமிழர்களைக் கொல்ல, தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி வருகிறது. இவை காற்றில் உள்ள ஒக்சிஜனை உறிஞ்சும் சக்தி கொண்டவை. உணவுப் பஞ்சம் என்று கூறி யாழ்ப்பாணத் தமிழர்களை சிறி லங்கா அரசு பட்டினிபோட்டு வருகிறது. உணவை ஆயுதமாக பயன்படுத்தும் இரக்கமற்ற அரசாக ராஜபக்ஸ அரசு உள்ளது.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறி லங்கா இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments