தற்போது தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் அறுபது வருடங்களுக்கு மேலாக எதுவித உரிமைகளும் வழங்கப்படாது ஈழத்தில் துன்பத்தில் மூழ்கிப்போயுள்ள தமிழ் மக்களுக்கு பெரும் ஆறுதலான விடயம் என்பதில் தவறில்லை.
தமிழக உறவுகள் தமது கட்சி பேதங்களை மறந்து இலங்கையில் ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட குரல் கொடுக்க வேண்டும் என்பது ஈழத்தமிழ் மக்களின் பேராவலாகும்.தற்போது தமிழக கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடானது, முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அழுத்தமானது. எனினும் அதற்கு செயல்திறன் கொடுக்கும் வரையில் ஓய்வு என்பது தமிழக மக்களுக்கு மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும் இருக்கப்போவதில்லை.
1948ஆம் ஆண்டில் இருந்து 1976ஆம் ஆண்டு வரை அகிம்சை வழியிலும், 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஆயுதம் ஏந்தியும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த காலப்பகுதியில் பேச்சுக்களும், போர்களும் மாறி மாறி நிகழ்ந்த போதும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என்பதற்கு மாறாக எந்த விதமான சலுகைகளும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது வேதனையானது.பத்தொன்பதாம் நூற்றாண்டு அத்திலாந்திக் பிராந்தியத்தின் ஆளுமைக்கும், 20 ஆம் நூற்றாண்டு பசுபிக் பிராந்தியத்தின் ஆளுமைக்கும், 21ஆம் நூற்றாண்டு இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான ஆளுமைக்குமான நூற்றாண்டுகளாக வரையறை செய்யப்பட்டிருந்தன.
அதாவது, வலுவான கடற்படை, பிராந்தியத்தில் பேணப்படும் தளங்களின் உறுதித்தன்மைஆகியவற்றிலேயே கடற்போக்குவரத்தின் ஆளுமை தங்கியுள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தின் கடற்பாதையின் முக்கிய புள்ளியில் அமைந்திருப்பது அதன் முக்கியத்துவத்தை அதிகரித்திருந்ததுடன், உலக வல்லரசுகளுக்கு இடையிலான பூகோள அரசியல் போட்டியையும் அதிகரித்திருந்தது.
இந்த பூகோள அரசியலில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்களும் பல இடர்களை சந்தித்து வருகின்றது. இலங்கை அரசை தமது வழிக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் இந்திய மத்திய அரசு உட்பட பல நாடுகள் இலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்களில் தமது தலைகளை நுழைத்து வருவதை யாரும் மறுத்துவிட முடியாது.பிராந்திய ஆதிக்கத்துக்கான போட்டிகளின்போது பொதுவாக இரு பக்கத்திற்கும் ஆதரவாக நாடுகள் அணிவகுப்பதுண்டு.
ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் இந்தியாவும், சீனாவும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், ஈரானும், பாகிஸ்தானும் இலங்கைக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகளை தமக்கிடையில் பகைமையின்றி வழங்கிவருவது கவனிக்கத்தக்கது. நோர்வே அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்த சமயம், இந்திய மத்திய அரசு உலங்குவானூர்தியை தாங்கிச் செல்லும் "சயுர' என்ற கண்காணிப்பு கப்பலை இலங்கைக்கு வழங்கியிருந்தது. போர் நிறுத்த காலத்தின்போது இலங்கைக்கான படைத்துறை உதவிகளை அமெரிக்க அரசு தொடர்ந்து அதிகரித்தே வந்திருந்தது.
அமெரிக்க அரசுக்கு சார்பான அறிக்கைகளின் படி 2004ஆம் ஆண்டு 1.9 மில்லியன் டொலர்களையும், 2005 ஆம் ஆண்டு 3.1 மில்லியன் டொலர்களையும், 2006ஆம் ஆண்டு 3.9 மில்லியன் டொலர்களையும் அமெரிக்க அரசு வழங்கியிருந்தது.இந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் பெருமளவான ஆயுத உதவிகளை வழங்கிவந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளும் விடுதலைப்புலிகள் மீதான தடைகளை கொண்டுவந்திருந்தன. மூன்றாம் கட்ட ஈழப்போருடன் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் படைவலுச்சமநிலை ஒன்று எட்டப்பட்டுவிட்டது என பலராலும் கணிப்பிடப்பட்ட தருணத்தில்தான் போர் நிறுத்தமும் சமாதானமும் ஏற்பட்டிருந்தன.
இந்த சமாதானம் நிரந்தரமான ஒரு தீர்வாக மாற்றம் பெறவேண்டும் என்றால் அதற்கு படைவலுச்சமநிலை பேணப்பட வேண்டும். இந்த தத்துவம்தான் மேற்குலகத்தினால் பொஸ்னியா மீதான நடவடிக்கையின் போது பின்பற்றப்பட்டிருந்தது.ஆனால், இங்கு நடைபெற்ற சம்பவங்கள் எதிர்மறையானவை. தமிழ் மக்களின் பிரதேசங்கள் மீதான தொடர்ச்சியான பொருளாதார தடைகள், இலங்கை அரசிற்கான படைத்துறை உதவிகள் என்பனவே போர் நிறுத்த காலத்திலும் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள். இது போர் நிறுத்த உடன்பாட்டை சீரழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே பலராலும் கணிக்கப்பட்டிருந்தது.
அனைத்துலக சமூகத்தின் ஏட்டிக்கு போட்டியான இந்த நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் நான்காம் கட்ட ஈழப்போரில் கடுøமயான பாதிப்புக்களை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது.இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கை அரசு தன்னிச்சையாக போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறிய போதும் இந்திய மத்திய அரசினதும், அனைத்துலக சமூகத்தினதும் செயற்பாடுகள் புறக்கணிக்க தக்க நிலையையே அடைந்திருந்தன.
இந்திய இலங்கை உடன்பாட்டில் எஞ்சியிருந்த ஒரே ஒரு அம்சமான வடக்கு, கிழக்கு இணைப்பை இலங்கை அரசு இரத்துச்செய்த போதும் இந்திய அரசு செயற்றிறன் அற்றதாகவே காணப்பட்டது.அது மட்டுமல்லாது, கடந்த 1987 ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுக்கு எதிராக நேரடியான மோதலிலும், 1990ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான 18 வருடங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மறைமுகமான செயற்பாட்டிலும் ஈடுபட்டுவந்த இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் நாலாம் கட்ட ஈழப்போரில் உச்சம் அடைந்திருந்தது.
இதனை கடந்த செப்டெம்பர் மாதம் வவுனியா வான்படை தளத்தின் மீது வான்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் இலகுவாக உலகிற்கு எடுத்து காட்டியிருந்தது. அது மட்டுமல்லாது இலங்கையில் உள்ள படைத்தளங்களில் இந்திய படைத்துறை சார்ந்த நிபுணர்கள் 265 பேர் பணியாற்றி வருவதையும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஒத்துக்கொண்டிருந்தது. இது தவிர வான்புலிகள் கட்டுநாயக்க வான்படை தளம் மீது கடந்த வருடம் மேற்கொண்ட வான் தாக்குதலின் போது இந்திய அரசினால் இலங்கைக்கு இரவலாக வழங்கப்பட்ட இரண்டு எம்.ஐ17 ரக துருப்புக்காவி உலங்குவானூர்திகளில் ஒன்று கடுமையாக சேதமடைந்திருந்ததை கொழும்பு ஊடகங்கள் வெளிக்கொண்டுவந்திருந்தன.
அரசு மேற்கொண்டு வரும் போரை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசினால் - இலங்கைக்கு இரகசியமாக வழங்கப்பட்ட இந்த துருப்புக்காவி உலங்குவானூர்தி தொடர்பான தகவல்கள் வான்புலிகளின் தாக்குதலுக்கு முன்னர் வெளியில் தெரிந்திருக்கவில்லை.இவை மட்டுமல்லாது, இந்திரா II வகை ராடர்கள் நான்கு, எல்70 ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் என்பவற்றை இலவசமாக -இலங்கை அரசுக்கு வழங்கிய இந்திய மத்திய அரசு நிசாந் வகை உளவுவிமானங்களையும் இலங்கை அரசுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது.
2006ஆம் ஆண்டு அன்றைய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்திய தேசிய பாதுகாப்புதுறை ஆலோசகர் மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், தமக்கு தேவையான ஒரு நீண்ட ஆயுத பட்டியலையும் கையளித்திருந்தார்.
அவர் கையளித்திருந்த ஆயுத பட்டியலில் இருந்த ஆயுதங்களின் விவரங்கள் வருமாறு:
வான்படைக்கு: மிக்27 தாக்குதல் விமானத்திற்கான உதிரிப்பாகங்கள் மற்றும் மறுசீரமைப்பு பராமரிப்பு பணிகளுக்கான உதவிகள், லேசர் மூலம் வழிநடத்தப்படும் வான் தாக்குதல் குண்டுகளுக்கான தொகுதிகள், பாரிய குண்டுகள் (ஈதட்ஞ ஞணிட்ஞண்), பதுங்குகுழிகளை ஊடுருவி தகர்க்கும் குண்டுகள் (கஞுணஞுtணூச்tடிணிண ஞணிட்ஞண்) உந்துகணை செலுத்திகளுக்கான தொகுதிகள், உளவு விமானங்கள்.
கடற்படையினருக்கு: கப்பல்களில் பொருத்தப்படும் மோட்டார் செலுத்திகள் (குடடிணீஞச்ண்ஞுஞீ ட்ணிtச்ணூண்), அதற்கான எறிகணைகள், சிறிய தாக்குதல் படகுகள், கடல் கண்ணி வெடிகள்.
இராணுவத்திற்கு: பல்குழல் உந்துகணை செலுத்திகள், மோட்டார்கள், வான்பாதுகாப்பு பீரங்கிகள் (அடிணூ ஞீஞுஞூஞுணஞிஞு ச்ணூtடிடூடூஞுணூதூ ண்தூண்tஞுட்ண்), 5.56 மி.மீ ஆயுதங்கள் (சிறப்பு படையினருக்கு), தரையில் நிறுவப்படும் ராடர்கள், இரவு பார்வை சாதனங்கள், துருப்புக்காவி கவசவாகனங்கள், மிலன் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கான வாகனங்கள் (Mடிடூச்ண ச்ணtடிtச்ணடு ட்டிண்ண்டிடூஞு டீஞுஞுணீண்).
இந்த ஆயுதங்களை வழங்குவதற்கு இந்திய அரசு முதலில் வெளிப்படையாக மறுத்த போதும் பின்னர் இரகசியமாக பலவற்றை இலங்கை அரசிற்கு வழங்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் இந்திரா-II ராடர்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், மிக்27 தாக்குதல் விமானத்திற்கான பராமரிப்பு பணிகள் என்பன அடங்கும்.
இந்த வருடம் இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் விதைக்கப்பட்ட கடல் கண்ணி வெடிகள், கடந்த ஏப்ரல் மாதம் மன்னார் படை நடவடிக்கையின் போது இராணுவத்தினால் ஏவப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், இலங்கை கடற்படை புதிதாக உருவாக்கியுள்ள சிறப்பு கடல் தாக்குதல் கொமாண்டோக்களுக்கான படகு தொகுதிகள் என்பன இந்த தகவல்களை வலுப்படுத்தியுள்ளன.
மேலும் விடுதலைப்புலிகளின் விநியோக கப்பல்கள் தொடர்பான புலனாய்வு தகவல்கள், படையணிகளின் நகர்வு தொடர்பான செய்மதி தகவல்கள், கடற்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசுக்கு இரகசியமாக வழங்கி வந்த இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டு கரையோரங்களில் வான்பாதுகாப்பு ராடர்களை நிறுவியதன் மூலம் வான்புலிகளால் குடாநாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சிகளிலும் மறைமுகமாக ஈடுபட்டிருந்தது.இந்தியா ஆயுதம் வழங்காது விட்டால் இலங்கை அரசு பாகிஸ்த்தானை நாடும் என தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சிகளையும் இந்திய மத்திய அரசு மேற்கொண்டிருந்தது.
ஆனால், உண்மை அதற்கு மறுதலையானது. தம்மால் வழங்கப்படும் சில வகை ஆயுதங்கள் சில அரசியல் நெருக்கடிகளை உள்நாட்டில் ஏற்படுத்தும் என்பதற்காக இந்திய அரசு சில ஆயுதங்களை பாகிஸ்தானிடம் வாங்குமாறு இலங்கைக்கு பரிந்துரை செய்த சம்பவங்களும் உண்டு. 2000ஆம் ஆண்டு ஆனையிறவு தளத்தின் வீழச்சியுடன் யாழ். குடாநாடு ஒரு முற்றுகைக்குள் சிக்கிய போது பாகிஸ்தானிடம் பல்குழல் உந்துகணை செலுத்திகளை வாங்குமாறு இந்தியாவே கைகாட்டி விட்டதாக கொழும்பு ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.இந்த செய்தியில் ஒரு முக்கிய செய்தியும் மறைந்துள்ளது.
அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசு பாகிஸ்தானுடன் கைகோர்க்கவும் தயங்கவில்லை என்பது தான் அந்த செய்தி.இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? வலிமையான ஒருங்கிணைந்த ஒரு பின்புலம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்பது தான் அதற்கான காரணம். உலகத் தமிழினம் என நோக்கும் போது தமிழகம் அதிக விகிதாசாரத்தை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாது தமிழக்கத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கின்றனர்.
எனவே தமிழகம் ஈழத்தமிழ் மக்களுக்காக அணிதிரளும் போது அதற்கான வலிமை அதிகம். அனைத்துலகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிகம், தமிழகம் ஈழத்தமிழ் மக்களுக்கான தனது ஆதரவை உறுதியாக நீட்டும் போது இந்திய மத்திய அரசு மட்டுமல்லாது அமெரிக்க அரசின் அசைவுகளும் ஆட்டம் காணவே செய்யும்.ஏனெனில் தற்போதைய இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான ஆதிக்க போட்டிகளில் அமெரிக்கா இந்தியாவை அனுசரித்து போவதையே கடைப்பிடித்து வருகின்றது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா என செறிவாக தமிழ் மக்கள் பரந்து வாழ்கின்றனர்.
இலங்கையில் நடைபெற்றுவரும் போரினால் பாதிப்படைந்து இடம்பெயர்ந்த மக்களே இவர்களில் அதிகம். இந்த மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு பொருளாதார மற்றும் அரசியல் வலிமைகள் உண்டு.எனினும் போர் நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடைகளை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் நாடுகளே மேற்கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?இந்த மக்களுடன் நேரிடையாக கைகோர்க்கவோ அல்லது அவர்களுக்கான வலிமையான ஆதரவுகளை வழங்கவோ தமிழகம் தவறியதுதான் அதற்கான காரணம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சி இந்த குறையை நீக்கியுள்ளது.
இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் படைத்துறை உதவிகளை வழங்கிவரும் நாடுகள் அரசியல் தீர்வு என்ன என்பது தொடர்பாக ஒரு போதும் ஆராய்ந்ததோ அல்லது கேள்விகளை கேட்டதோ கிடையாது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தயார் என அறிவித்த படி போரை தீவிரமாக்கி வருவதுண்டு.ஆனால், அரசாங்கங்கள் கூறிவரும் அரசியல் தீர்வு என்ன என்பது தொடர்பாக யாருக்கும் எதுவுமே தெரியாது.
அழுத்தங்கள் காரணமாக தீர்வு திட்டம் தொடர்பான சில தகவல்கள் வெளிவந்தாலும் அவை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கிராமசபை, நகரசபை என்ற வட்டத்திற்குள் எந்த விதமான அதிகாரங்களுமற்று நின்று விடுகின்றன.""பால்கன் வளைகுடாவில் கொசோவோ, மொன்ரோநிக்ரோ என அமெரிக்கா தனக்கு சார்பான பல சிறிய நாடுகளை உருவாக்கும் போது நாம் ஏன் எமக்கு சார்பான ஒரு நாட்டை உருவாக்க முடியாது? நாம் ஏன் தன்னிச்சையாக பிறிதொரு நாட்டின் மீது படை வலுவை பயன்படுத்த முடியாது?'' என அண்மையில் நடைபெற்ற ஜோர்ஜியா மீதான போரின்போது ரஷ்யா ஒரு வாதத்தை முன்வைத்திருந்தது.
உலக வரைபடத்தில் சிறிய நாடுகள் உருவாக முடியாது, உரிமைக்காக போராடும் மக்கள் ஒற்றை ஆட்சியை விடுத்து பிரிந்து செல்ல முடியாது என்ற வாதங்கள் எல்லாவற்றையும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள் தகர்த்துவிட்டன.ஆனால், ஒரு இனம் அதற்கான உரிமைகளை பெறுவதற்கு உலகெங்கும் பரந்துவாழும் அந்த இன மக்கள் தமது உள்ளக அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பது உண்மை.சாதாரண அதிகாரிகள் இந்திய மத்திய அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்களைவிட மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்படுத்தகூடிய அழுத்தங்கள் அதிகமானது.
அதாவது அரசியல் தலைவர்கள் தமது அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தும் போது இந்திய மத்திய அரசை காலங்காலமாக தவறாக வழிநடத்தும் அதிகாரிகளின் ஆலோசனைகள் வலுவிழந்து போவதுடன், இலங்கை அரசுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதை தவிர வேறு வழிகள் இருக்கப்போவதில்லை. அதனை உறுதிப்படுத்தும் நிலை இந்திய மத்திய அரசுக்கும் ஏற்படுவதுடன், பூகோள அரசியலை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்த முனையும் அனைத்துலக நாடுகளும் தமது போக்குகளை மாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
தமிழகத்தின் தற்போதைய எழுச்சிக்கு இந்த வலிமை உண்டு. எனவே இந்த எழுச்சி இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு அமைதியை ஏற்படுத்த வழிகோலுமா என்பது தான் பலரதும் எதிர்பார்ப்புக்கள்.
அருஷ்

Comments