தமிழக அரசியல் தலைவர்களின் உணர்வுமிக்க போராட்டங்களும் இந்திய அரசியலும்



வீரவசனங்கள் விசில் அடிப்புக்கள் கை தட்டல்கள் கடல் அளவு வாங்கியவர் கலைஞர். எவரும் பதவிப் பொறுப்புக்கள் பாசப் பிணைப்புக்கள் வந்த பின்புதான் அவற்றால் பெற்ற பேருக்கும் புகழுக்கும் உள்ள சுமை தெரியும். கலைஞரின் செயற்பாடு ஈழத் தமிழினத்துக்கு இது வரை காலமும் ஏமாற்றம் தந்தன என்பது உண்மை. ஆனால் அவர் எத்தகைய ஒரு கீழ்த் தரமான எதிரியை வைத்துக் கொண்டு தமது தமிழ் உணர்வையும் தமிழினப் பாசத்தையும் வெளிப் படுத்த வேண்டும் என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரிகிறது.


ஒரு ஈழத் தமிழனின் சோக மரணத்தைக் கூடத் தமது தமிழில் கவிதையில் வடிப்பதே தேசத் துரோகம் எனக் கூறுவதும் . அதற்காக அவரது ஆட்சிசைக் கலைக்க வேண்டும் எனக் கூச்சல் போடுவதும் மிகக் கீழ்த்தரமான அரசியல். அப்படியான ஒரு கலைப்புக் கரசியின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிவிடாது தப்புவதே கலைஞருக்குப் பெரும் பாடாக இருந்து வந்துள்ளது. கடந்த பல வருடக் கலைஞரின் மாபெரும் மௌனத்துக்கும் இந்தக் கலைப் புக்கரசிதான் காரணமே எனலாம். இப்போதும் கூட இந்தக் கலைப்புக் கரசி ஈழத் தமிழருக்காக ஒப்பாரி அறிக்கை விட்ட மறுநாளே புலிகளுக்காகக் கலைஞர் பரிந்து பேசுகிறார் அவரது ஆட்சியைக் கலைக் வேண்டும் எனத் தமது முழங்கால் மூட்டு வலியையும் மறந்து துள்ளிக் குதிப்பதை எப்படி மன்னிப்பது ? தன்னைத் தமிழனாக நினைத்துக் கொள்ளும் எந்த ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இப்படிப் பட்ட பொறுப்பற்ற அரசியலை மன்னிக்க முடியுமா?

அடுத்த ஆட்சியை காங்கிரசின் துணையுடன் தானே அமைத்து விடலாம் என்ற நப்பாசையில் நர்த்தனம் போடுகிறார். இவரால் தமிழ் நாட்டுக்கோ தமிழகத்துக்கோ துளி அளவும் நன்மை வரப் போவதில்லை என்பதை இவரே உறுதிப் படுத்துpக் கொண்டே வருகிறார். எனவே தமிழகத் தமிழ் உணர்வாளரின் வீர வசனங்களும் , மாணவர்களும் மற்றவர்களும் பேசும் பேச்சுக்களும் செய்யும் செயல்களும் அவர்களை வாழ்நாள் முழுக்க வருத்தந் தரும் அளவுக்கு முடிவுகளைத் தந்து விடலாம். அத்தகைய ஒரு கொடுமைகளைச் செய்ய அதிகாரம் வழங்கும் பொடா போன்ற சட்டங்களை இந்தியாவும் இலங்கையும் வேறு பல நாடுகளும் அதிகாரத்தில் உள்ளவர்களின் நலனுக்காக மிரட்டலுக்காக தமது கைகளில் வைத்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேச்சும் கலைப்புக் கரசியின் மிரட்டலும் பார்க்கப் படவேண்டும். தூபம் போடும் சுப்பிரமணிய சுவாமிகளும் தமிழகக் காங்கிரசுத் தலைவர்களும் மற்றைய கட்சிகளும் விடும் அறிக்கைகளும் தமிழ் மக்களுக்கு நன்மை தருவனவாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. இந்திய மத்திய அரசின் போக்கில் எதுவித மாற்றமும் வரப் போவதில்லை என்பதையே இவை காட்டுகின்றன. மாறாக பிராந்திய நல்லுறவு பாதுகாப்பு என்ற மந்திரத்தால் தமிழின அழிப்பை இந்தியா ஊக்குவிக்கும் பணி தொடரும் என்பது உறுதியும் இறுதியுமான முடிவுகளாக உள்ளன.

இக் கட்டுரையை எழுத நினைத்திருந்த பொழுதே இயக்குநர்கள்; சீமானும் அமீரும், வை.கோ. கண்ணப்பன் மற்றும் தொல் திருமாவளவனும் தொண்டர்களும் கைதாக்கப் பட்டு விட்ட கவலைக் குரிய சேதிகள் வெளியாகிவிட்டன. இவர்கள் எப்போ எப்படி வெளியே வருவார்கள், இதனால் வரும் விளைவுள் என்ன எவை என எவரும் அறுதியிட்டு இப்போ சொல்லிவிட முடியாது. இந்திய மீனவ மக்களின் உயிர் போவதையே துச்சமாக நினைக்கும் இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழரின் உயிரழிவுக்கா கவலைப்படப் போகிறது ?

இந்திய மக்கள் எல்லாருடைய தலை மேலும் கழுத்தறுக்கும் வாளாகப் பொடாச் சட்டம் அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. இவை போன்ற சட்டங்கள் இன்று ஜனநாயகம் என்று கூறிக் கொள்ளும் எல்லா நாடுகளிலும் அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டும் சாதனமாக உள்ளன. ஏற்கனவே கலைப்புக் கரசி கலைஞர் ,வை.கோ., பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் போன்றோரைச் சிறையில் வைத்து வாட்டியவர். கலைப்புக் கரசி மீண்டும் அதிகாரத்துக்கு வர அவசரப் படுவதும் எடுத்த தற்கெல்லாம் ஆட்சிக் கலைப்பு கோருவதும் அவரது அதீத ஆக்குரோச அரசியல் வெறியைக் காட்டுகிறது.

இந்திய பொடாச் சட்டம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வடக்கு மாநிலங்களில் முஸ்லீம்களுக்கும் எதிராக பல மோசமான முறையில் பயன் படுத்தப் பட்டிருப்பதை வுநாநடமய.உழஅ நெடுநாள் ஆய்வின் முடிவாக வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. முஸ்லீம் என்ற காரணத்தால் மவுகாசிம் பில்லா என்ற 22 வயதான பொறியியல் கல்லூரி மாணவன் தனது படிப்பைத் தொடர முடியாது பொடா சட்டத்தின் கீழ் அநியாயமாகத் துன்புறுத்தப் பட்டான்.


இன்னொரு அரச வைத்தியரான முகமட் ஹசன் என்பவர் மலேரிய நோயாளிக்குச் சிகிசசை அளித்தார் அந்த நோயாளி ஒரு தீவிரவாதி எனவும் வேறும் பல ஆதாரமில்லாத குற்றச் சாட்டுகளைச் சுமத்தி அவரது அரச வரவுப் பதிவேட்டு ஆதாரத்தையும் ஏற்காது அவரைப் பொடாச் சட்டம் தண்டித்தது. இவற்றை ரெஹெல்ஹா ஆகஸ்டு மாதம் 16ந் திகதி பருவ இதழ் இல.32ல் விளக்கமாகத் தந்துள்ளது.


இன்றுள்ள பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே .நாராயணன் வெளிப் படையாகவே தலைவர்களை மிரட்டித் தன் விருப்பப் படி வழிநடத்தும் திறமை பெற்றவர். இவரும் மணிஷங்கர் ஐயரும் தமிழர் என்றாலே இந்து ராம், சுப்பிரமணியன் சுவாமி, சோ , ஜெயலலிதா, மகிந்த ராஜபக்ஷ போன்று ஆரிய இன மேலாதிக்கச் சிந்தனையுடன் செயற் படுபவர்கள். இவர்களின் வழி காட்டலில் இயங்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை தொடர்பான கருத்து வெளிப்பாடு பார்க்கப் படவேண்டும்.

இவர்கள் இத்தனை வெளிப்படையாகவும் உறுதியாகவும் இலங்கைக்கு இராணுவ தளபாட வள உதவிகளும் பயிற்சிகளும் தொடரும் என்பதும் அதன் மூலமே இலங்கையில் வேற்று நாடுகளின்: ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்தி இந்துpயாவின் பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதும் வேடிக்கையான விளக்கங்களே. ஏற்கனவே சீனா இந்தியா போன்ற இந்தியாவின் பகை நாடுகள் புகந்து விட்ட இலங்கையை இவர் அறியாதவரா ? இவை எந்த அளவுக்கு இலங்கைக்கு உதவுவார்கள் என்ற எல்லையே இல்லாத நிலையைக் காட்டுகின்றன. இத்தகைய பின்னணியில் கலைஞரின் நடவடிக்கைகளை நாம் பார்க்க வேண்டி உள்ளது.

எனவேதான் எமது அன்புக்கும் அபிமானத்துக்கும் உரிய தமிழகத் தமிழ் மக்கள் தமது பேச்சுக்களாலும் செயல்களாலும் தமிழ் மக்களின் எதிரிகளின் சதிகளுக்கு உள்ளாகி தமிழரின் உரிமைக் குரலுக்கு வாய்ப் பூட்டு போட்டு விடக் கூடாது என்பதே ஈழத் தமிழினத்தின் ஆதங்கமாய் இருக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழகத் தமிழர் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் நோட்டுக்கும் இலவசங்களுக்கும் ஆசைப்பட்டு ஆட்சியை தமிழின விரோதிகளின் கரங்களுக்குள் விழுந்து விடாது காப்பாற்றுவதே ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கும் நன்மை தரும் செயலாகும்.

இனத் துரோகிகள் ஆட்சிக்கு வந்தால் இதே பொடாச் சட்டத்தைக் கொண்டு அராஜக ஆட்சியும் தமிழின உணர்வாளர்களைச் செயற்பட விடாது தடுக்கும் ஒடுக்கு முறையும் தொடர்ந்தே இருக்கும். இத்தகைய ஒரு ஆட்சியை வரவிடாமற் செய்யும் அதிகாரம் இன்னும் சில மாதங்களில் வரப் போகும் பொதுத் தேர்தல் தமிழ் மக்களுக்குத் தரப்போகிறது. அதனால்தான் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பல கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தமது கட்சி அரசியல் கண் கொண்டு பார்த்துச் செயற் படுகிறார்கள். இதனால் தமிழகத் தமிழ் மக்களுக்கும் பாதகமான ஒரு ஆட்சியை பெறும் துயர நிலையும் வரலாம். எனவே தமிழார்வம் மிக்கவரும் ஈழத் தமிழ் மக்கள் மீது உண்மைப் பாசம் கொண்டவரும் இக்கால கட்டத்தில் பொடாவின் இரும்புக் கரங்களுக்குள் சிக்கிவிடாது பொதுத் தேர்தலை மிகச் சாதுரியமாகப் பயன் படுத்துவதே எமது ஆசையும் ஆகும்.

இலங்கையில் உள்ள அவசர காலச் சட்டம் பொது மக்களின் சுதந்திரங்களை முழு அளவில் கட்டுப் படுத்த முடியாது என்ற காரணத்தால் 1970களில் பயங்கரவாத திடைச் சட்டத்தின் மூலம:; அரச பாதுகாப்புத் துறைகளுக்கு சட்டுத்துக்குப் புறம்பான, மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கவும் நீதி விசாரணை இன்றி கால வரையறை அற்;ற கைதுகள் ஆட் கடத்தல் கொலைகள் கொள்ளைகளுக்கு இடம் அளிப்பதோடு நீதி கோருவது கூட சாத்தியம் அற்றதாக்கி விடுகிறது. இதே Nபுhன்ற கவலை தரும் நிலை எமக்கும் உலகத் தமிழினத்துக்கும் பெரும் பலமாக விளங்கக் கூடிய தமிழக மக்களுக்கு வர விடாது காப்பாற்றுவது தமிழினத்தின் இன்றைய தேவையாகிறது. எனவே தமிழகத்தின் தமிழ் உணர்வின் ஊற்றுக் கண்ணாகவும் அரசியல் அறிவும் அனுபவமும் கொண்ட ஐயா திரு பழ.நெடுமாறன் அவர்களின் கருத்தினை தமிழ் இன அபிமானிகள் கட்டாயமாகக் கவனத்தில் எடுக்க வேண்டும் எனப் பணிவோடு தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இன்று இந்தியாவின் செல்வாக்கினால் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல வெளிநாடுகள் தடைசெய்ய முடிந்தது. இதனால் புலம் பெயர் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளும் தமிழீழ தேசியம் சார்ந்த பரப்புரைகளைச் செய்யவும் முடியாத அளவு கட்டுப் படுத்தப் பட்ட நிலை உருவாகி உள்ளது. இதனை இன்று மலேசிய அரசும் அதனது தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை புலிப் பயங்கரவாதிகள் என அடக்கி விட்டது.

ஒரு தீபாவளி வாழ்த்து மடலும் கடிதமும் கொடுக்கப் போன மலேசியத் தமிழ்ச்சிறுமியையே காவல் துறை சிறைவைத்த அதிசயம் நிகழ்ந்தது. மலேசியத் தமிழரையும் தமிழக அரசோ இந்திய அரசோ கைகழுவி விட்டது தமிழனுக்காக எங்கேயும் எவனும் குரல் எழுப்ப முடியாத நிலை உருவாக இந்திய அரசின் இலங்கைத் தமிழர் தொடர்பாக கடைப் பிடிக்கும் வெளியுறவுக் கொள்கையே முக்கிய காரணம் என்பது தெளிவு. இந்திய இலங்கை அரசுகளின் ஈழத் தமிழின அழிப்பை தமிழ் மக்கள் எதிர் கொள்ள வேண்டுமானால் உணர்சிகளைக் கொட்டி உபத்திரவத்தை வாங்கித் தமிழகத் தமிழனம் அழிந்து போகாது அடுத்த தேர்தலை வெற்றிகரமாகப் பயன் படுத்துவது ஒன்றெ சிறந்த வழியாகும்.
!
பத்மா

Comments