ஒன்றுபட்டு போராடுவோம் என்று கூறிவிட்டு இப்போது கைதுசெய்வது என்ன நியாயம்? - வைகோ


தனித் தமிழ்நாடு கோரி பேசியதாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை சனிக்கிழமை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது தான் எனது நோக்கம். ஆனால், மன்மோகன் சிங் அரசு இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறது. இதற்கு தி.மு.க.வும் உடந்தையாக இருக்கிறது. இது காங்கிரஸை திருப்திப்படுத்துவது போலவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்றார். ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்டு போராடுவோம் என்று சொல்லிவிட்டு, இப்போது கைது செய்வது என்ன நியாயம் என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

வைகோ கைது செய்யப்பட்ட பின் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் மற்றும் ராடர் கருவிகளை வழங்கி, இனப்படுகொலையை ஊக்குவித்து வருகிறது. இதற்கு நான்கரை ஆண்டு காலம், மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும், அதில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளும்தான் காரணம் என்று நான் குற்றம் சாட்டினேன்

Comments