ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து மலேசியா வாழ் தமிழர்கள் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஜனநாயக செயல் கட்சியின் பிறை ஜாலான் பாரு கிளை செயலாளர் சத்திஸ் முனியாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இராணுவத் தாக்குதல்களை கண்டிக்கும் நோக்கத்துடன் ஒரு கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம் சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கு எதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டனக் கூட்டம் ஒன்றினை ஜசெக, ஜாலான் பாரு கிளை நடத்துகிறது.
இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.
இடம்: பிறை, ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்
நாள்: 17.10.2008 (வெள்ளிக்கிழமை)
காலம்: இரவு 8.00 மணிக்கு மேல்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments