ஈழத்தமிழர்களின் பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதற்கு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன. அவர்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை வழங்குதல், அவர்கள் பிரிந்து சென்று தனி அரசை அமைக்க அனுமதித்தல், இந்த நாட்டிலிருந்து தமிழர்களை அடியோடு கொன்றொழித்துவிடுதல், இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யாவிடில் இன்னும் முப்பது வருடங்களுக்குப்போர் தொடரும்.
இவ்வாறு யதார்த்தப்போக்குடன் நாடாளுமன்றில் எச்சரித்திருக்கிறார் தமிழர்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த எட்டு வருடங்களில் இந்த நாட்டைப் பிடித்த இனப்பிரச்சினை என்ற பொல்லாதநோய், இன்னமும் குணமாகவில்லை. இனியும் நாடு சுகமடையும் என்பதற்கான எந்தவித ஆரோக்கியமான அறிகுறியும் இல்லை.
இந்த நாட்டின் பெரும்பான்மையினர் சிங்கள மக்கள். அதனால் அடுத்தவர்கள் எல்லோரும் இரண்டாந்தரப் பிரசைகள் என்ற சிங்கள - பௌத்த பேரினவாதக்கோட்பாட்டின் விளைவாக இந்த நாட்டு அரசுகள் தமிழர்களுக்கு எதிராகக் தொடர்ச்சியான பலவகைப்பட்ட கொடூரங்களைப் புரிந்துவந்தன.
அந்த அதர்மத்தனத்தின் பிரதான உத்திகளில் தமிழர்களைக் கொன்றொழித்து விடவேண்டும் என்பதும் ஒன்று.
சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் அவை தலைமையிலான கூட்டணிகளும் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ உரிய பிறப்புரிமைகளைச் சிங்களவர்களுக்குச் மேதை யாக வழங்கவில்லை; வழங்க விரும்பவில்லை.
வெறும் அற்பசொற்ப சலுகைகளை, எழுத்தளவிலான சிறு சில உரிமைகளைக்காட்டி, தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வந்தன. இப்போதும் அதுவே நடைபெறுகின்றது.
இந்த நாட்டின் சரித்திரகாலம் முதற்கொண்டு பூர்வீகக் குடிகளாக வாழும் தமிழ் மக்களைத் தமது போட்டியாளர்களாக மாத்திரமன்றி எதிரிகளாகப் பார்த்து, அவர்களை ஒடுக்கி வைத்திருப்பதே இங்கு கடந்த 60 வருடகால அரசியல் சரித்திரமாகி உள்ளது.
நவீன உலகின், நாகரிக உலகின், மனிதர்களின் அடிப்படை உரிமைகளை, பிறப்புரிமைகளை அனுபவிக்கும் தகுதியைத் தமிழர்களுக்கு வழங்கக்கூடாது என்றபேரினவாதப் பேயே இத்தனை வருடங்களாக இலங்கையில் தொடர்ந்து கோலோச்சகிறது.
இந்தப் பின்னணியில், கூர்ந்து நோக்கும்போது, இன்றைய காலகட்டத்தில் சம்பந்தன் முன்வைத்த மூன்று தெரிவுகளில் ஏதாவது ஒன்று உடனடியாகச் செயலுருப் பெறவேண்டிய தேவை உண்டு என்பது புறமொதுக்கக் கூடியதல்ல.
அருகில் உள்ள, ஆசியாவின் வல்லரசாகக் கருதப்படும் இந்தியாவையே தனதுபேரினவாத நலன்களுக்கு ஒத்தூதவைக்கும் தந்திரத்தைக் கையாளும் மஹிந்தவின் ஆட்சியின்கீழ் - இன்றைய ஆட்சி முறைமையின் கீழ் - தமிழ் மக்கள் தமது பிறப்புரிமைகளை, தமது பிரிக்க முடியாத உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு கிஞ்சித்தும் கிடைக்காது என்பது கடந்த இரண்டு மூன்று வாரங்களில் மேடையேறி இருக்கிறது.
ஈழத்தமிழ் மக்கள்வேறு, புலிகள்வேறு என்ற வாய்ப்பாட்டை இந்திய மத்திய அரசினை விழுங்க வைத்து, தனது காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார் இந்த நாட்டின் ஜனாதிபதி. ராஜீவ் - ஜே.ஆர் ஒப்பந்தத்தின் பிரகாரமான 13ஆவது அரசமைப் புச்சட்டத்திருத்தத்துக்கு வர்ணம் பூசி, இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணும் நாடகத்தை இலங்கை அரச அரங்கேற்ற முயல்கிறது.
இந்தியாவும் தனது பிராந்திய நலன்களை மனதில் வைத்து, சீனாவையும் பாகிஸ்தானையும் உந்தித் தள்ளி விடும் சுயநலத்துடன், 13ஆவது சட்டத்திருத்தத்தை சர்வசேதராக நிவாரணியாக, இராஜதந்திர தூரநோக்கின்றி கையில் ஏந்தத் தயாராகிவிட்டது.
இந்தியாவின் இந்தப் "பலவீனத்தை" தனக்குச் சாதகமாக்கி இலங்கை அரச தமிழர்களின் அரசியல் உரிமை களை வழங்கப்போவதாக - வழங்குவதாக - நாடகமாட முனைகிறது.
புலிகள்வேறு தமிழர்கள் வேறு என்று பிரித்துக் காட்டி தமிழ் மக்களின் உரிமைப் போரை ஒடுக்க முய லும் சிங்கள அரசுகள் புலிகள் இயக்கம் தோன்றத் தாமே காரணர் என்பதனைத் தமது பேரினவாத லாபம், நோக்கம் கருதி மறைத்து விடுகின்றன.
ஈழத்தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன் முறைகள் (பயங்கரவாதம்) காரணமாகவே புலிகள் இயக் கம்தோற்றம்பெற்றது என்ற பூசணிக்காயை இலங்கை யோடு சேர்ந்து இந்தியாவும் முழுச்சோற்றில் புதைக்க முற்பட்டிருக்கிறது.
தமிழர்களின் பிரச்சினையை நீதியாகவும் நியாயமாக வும் அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கு இன்றைய அரசுக்கு எள்ளளவிலேனும் மனத்தூய்மையான, உள்ளார்ந்த விருப்பம் இல்லை.
சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படும் என்று வெறும் பேச்சுக்குக் கூறி வருகிறது. அதனை உண்மையென நம்பச் செய்வதற்கானசுழ்ச்சி மந்திரம்தான் தமிழ்மக்கள்வேறு; புலிகள்வேறு என்பது.
இந்த மந்திரத்தை வைத்துக்கொண்டு இப்போதைய அரசு உலகத்தை எத்தனை காலத்துக்கு ஏமாற்ற முடியும் என்பதனைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் அமையும்.
அநீதி எப்போதும் நிலைக்காது நீதிக்கான; ஒளி என்றோ ஒரு நாள் பிறந்தே தீரும்.

Comments