காசுமீர் ,அருணாசலபிரதேசம், காவிரி, முல்லைப்பெரியாறு, ஒகனேக்கல், பாபர் மசூதி, உத்தராஞ்சல், உத்தராகாண்ட், சட்டீஸ்கர் என பொங்கி வழிந்த 'இந்தி'தேசியம்,அதன் இறையாண்மை இப்போது ஈழம் குறித்து நாய் போல குறைத்துக் கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டின் ஆறரைக் கோடித் தமிழர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்ற ஓர் அத்து கூட இல்லாமல் இந்திய அரசு அதே தமிழ் இனத்தை ஈழத்தில் அழிக்க சிங்கள அரசுக்குத் துணை புரிகிறதென்றால் அதன் பொருள் என்ன?வெளிநாட்டுக்கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கமே. இந்திய அரசு தமிழகத் தமிழர்கள் பால் என்ன அணுகுமுறை கொண்டிருக்கிறதோ அதே அணுகுமுறையைத்தான் ஈழத்தமிழர்கள் பாலும் கொண்டிருக்கிறது.
தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.
இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்? இந்தியாவின் கடலோரக் காவல்படை சுழன்று சுழன்று சுற்றி வந்தபோதும் தமிழக மீனவர்களைச் சிங்களர் சுட்டுக் கொல்வதும் கடத்திச் செல்வதும் தடுக்கப்படவில்லையே ஏன்? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் மீன்பிடித்தால் அவர்களைத் கைது செய்யலாம். அதைவிடுத்து அவர்களை சுட்டுக் கொல்வது என்ன நியாயம்?
தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது6 கோடி தமிழ் மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளை மறந்துவிட்டு, நாங்கள் செய்வதும், சொல்வதும் மட்டுமே சரி என்று ஈழத்திற்கு பல விளக்கங்களையும், விபரங்களையும் கட்டுரை, கட்டுரையாய் எழுதி தள்ளிக் கொண்டும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அறிக்கைகளையும் அள்ளிவிட்டு ஊளை இட்டு கொண்டிருக்கின்றனர்.இவர்களின் இந்த கட்சிகளின் நோக்கம் தான் என்ன?இதைத்தான் நாம் முன்பு பல தடவை கூறிவந்துள்ளோம்..
தமிழகத் தேர்தல் கட்சிகள் இந்திய அரசின் கங்காணிக் கட்சிகளாகவே செயல்படுகின்றன. தமிழகக் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளானாலும், இடதுசாரிக் கட்சிகளானாலும், மாநிலக் கட்சிகளானாலும் இந்திய அரசுக்குக் கங்காணிகளாகவே சேவை செய்கின்றன. இவை எதிரெச்திர்க் கூட்டணிகளில் இருப்பதும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதும் தேர்தல் ஆதாயங்களுக்கான போட்டி தவிர, தமிழ் இன உரிமை சார்ந்த கொள்கைச் சிக்கல் காரணமாக அல்ல. தமிழ் இனத்தைத் தில்லிக்கு, அடமானம் வைத்துப் பெறும் பணம், பதவி, ஆகியவற்றைப் பங்கிட்டுக் கொள்வதில் இக்கட்சிகளுக்கிடையே போட்டி, பொறாமை, சண்டை ஆகியவை ஏற்படுகின்றன. புரட்சிகரத் தமிழ்த் தேசியர்களுக்கு மேற்கண்ட புரிதல் அரசியல் அரிச்சுவடி போல் அத்துப்படியாக வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகள், தமிழர் உரிமைக்கும் நலனுக்கும், ஈழத் தமிழர் நலனுக்கும் குரல் கொடுக்கவே மாட்டா என்பதல்ல இதன் பொருள். தமிழகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் உரிமைக்காதரவாக எந்தப் போராட்டமும் நடத்த மாட்டா என்பதல்ல. அவற்றின் தமிழ் இன ஆதரவுக் குரலும் போராட்டமும் "புதுதில்லி ஏகாதிபத்தியம்" அனுமதிக்கும் வரம்புக்கு உட்பட்டவைதாம். அந்த வரம்பைப் புரிந்து கொண்டு அக்கட்சிகள் சிலவற்றுடன் குறிப்பிட்ட ஒரு சிக்கலில் கூட்டுப்போராட்டம் நடத்தலாம். அதற்கு மேல் அக்கட்சிகளைத் திருத்திவிடலாம் என்று சிலர் பேசுவதும், அவற்றை நாம் ஆதரித்து ஆதரித்துத் திசைமாற்றிவிடலாம் என்று நம்புவதும் குழப்பவாதம் தவிர வேறல்ல.
தமிழனாய் பிறந்து நல்ல தமிழில் பேசி தமிழனை ஓட்டாண்டியாய் ஆக்கி ஏ.சி ரூமுக்குள் சுகபோகத்துடன் ஏகபோக வாழ்க்கை நடத்திவரும் நம் வெள்ளை சட்டை வேந்தர்களின் வெத்து வேட்டுக்களை முதலில் நாம் ஒழித்தாக வேண்டும். தேசியம் பேசும் கதர்சட்டைகாரர்களும், தேசியத்தோடு இந்துத்துவா பேசும் வேதாந்திகளோடு, தான் செய்தால் சரி அதை மற்றவன் செய்தால் தவறு என வர்ணித்துவரும் புரட்சிகளுக்கு சொந்தக்காரர்களும், பெரியாரின் கரம் பற்றி, அண்ணாவின் அடியொற்றிவர்களும் என்று ஆதாய நோக்கில்லாமல், கொள்கை கத்தரிக்காய் என்று பேசாமல், என்று மக்களின் பிரச்சனைகளுக்கு பெருவாரியான மக்களின் உணர்வகளுக்கு மதிப்பளித்து ஓட்டுக்களை குறிவைக்காமால் செயல்படுகிறார்களோ அன்று தான் ஓரளவக்கு ஜனநாயகம் என்பது சாத்தியம்..
மாநிலத்திற்கு ஒரு கொள்கை பேசும் நம் தேசியத் தொண்டர்களுக்கு இங்கே மகாராஸ்டிரம் இந்தியாவில் இல்லாத மாநிலம் என்று அறிவித்துவிட்டார்களோ?. மராட்டியர்களைக் காக்கவே தோன்றியதாக தாக்கரேக்கள் குடும்பம் மாறி மாறி மண்ணின் மைந்தன் கோஷத்தை போட்டுக் கொண்டே உள்ளனரே, எங்கே நாம் பேசாவிட்டால் நம்மை மராட்டியர்கள் புறக்கணித்துவிடுவார்கள் என்று அங்குள்ள தேசியத் தொண்டர்களும் ஒத்து ஊதி வருகிறார்களே. நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகமம் தயங்கி வருகிறதே?. அங்கெல்லாம் வராத தேசியமும், இறையாண்மையும் மட்டும் தமிழன் என்று சொன்னாலே கூடவே ஓடி வந்துவிடுகிறதோ நம்மவர்களுக்கு, ஏன் மராட்டியன் மட்டும் தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறானா?, தமிழனுக்கு உப்பை பற்றியே தெரியாதா?.அவன் என்ன எருமை மாடா?
இவர்களின் தேச பக்தியையும், நாட்டுப் பற்றையும், இறையாண்மையையும் மராட்டியர்களின் மாவீரன் தாக்கரேக்கு முன் காட்டட்டுமே. முடியாது அவர்களால் ஏனென்றால் அங்குள்ளவர்கள் மராட்டியர் என்று ஒரே குடையின் கீழ் வந்து இவர்களை புறக்கணித்து விடுவார்கள், ஆனால் தமிழனைத் தான் நாம் தேசியப் பாலூட்டி எல்லை கடந்த இறையாண்மையை காட்டி சாதி, மதம் என வகுப்புவாரியாக பிரித்து விட்டானே. ஆதனால் இளிச்சவாயன் தமிழனுக்கு மட்டும் தான் இறையாண்மை, தேசியம், கத்தரிக்காய், சுண்டைக்காய் எல்லாம்.
அன்றும் சொன்னோம் என்றும் சொல்கிறோம்..தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையை பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் "இந்தி"யனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்
தமிழா இன உணர்வு கொள்! அது தெரியவில்லை என்றால் மராட்டியர்களிடமிருந்தும்,சீக்கியகளிடமிருந்தும் இவ்வளவு ஏன் உன்னை வருடா வருடம் தவணைமுறையில் அடிக்கும் கன்னடனிடமும் இருந்து கற்று கொள்..
இன்று நீ இன உணர்வு இல்லாமல் போனால் உன் இடத்திலே வேறு ஒருவன் உன்னை ஆண்டு கொண்டு இருப்பான்..நீ தெரு தெருவா.. அவனிடம் பிச்சை எடுத்து கொண்டு இருக்கவேண்டியதுதான்
--புரட்சிகர தமிழ்தேசியம்

Comments