தாயகம் எங்கும் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள் நாளை தொடங்குகிறது



தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர்களுக்கான எழுச்சி நாள் நிகழ்வுகள் நாளை தொடங்குகின்றன.
இந்நிகழ்வுகளுக்காக தமிழீழ தாயகம் எழுச்சிக்கோலம் பூண்டிருக்கின்றது.

எங்கும் சிவப்பு-மஞ்சள் வர்ண கொடிகள் கட்டப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்கள் கொண்ட மாவீரர் மண்டபங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கவுள்ளன.

பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை எடுத்தல், நினைவுரைகள் எனும் ஒழுங்கில் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை காலை 8:30 மணிக்கு ஏற்றப்படும் தேசியக்கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாள் நிகழ்வு முடிவடையும் போது இறக்கப்படும்.

பொது நிறுவனங்கள், பள்ளிகளில் நாளை தொடக்கம் 27 ஆம் நாள் வரை ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின்னர் பிற்பகல் 12:00 மணிக்குப் பின்னரும் மாலை 6:00 மணிக்கு முன்பாகவும் இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும்.

இதற்கான ஒழுங்குகள் அனைத்து இடங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன


Comments

googlefm said…
hello srilankatamilan supper
googlefm said…
hello srilankatamilan supper