யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதை ஒருசில தினங்களில் உத்தியோக பூர்வமாகத் திறந்துவிடப்படும் என்ற படைத்துறைப் பேச்சாளரின் கூற்றும், புலிகளை அழித்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தை என்ற அரசுத்தலைவரின் போக்கும், வட போர் அரங்கில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்றே கருத வைக்கின்றன.
கடந்த வாரம் வட போர்அரங்கில் பல முனைகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளுக்கு எதிராகப் புலிகள் மேற்கொண்ட எதிர்த் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருந்ததோடு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்த போதிலும் படைத்தரப்பு இந்த இழப்புக்களையும் தாண்டி முன்னேறுவதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. இதன் விளைவுதான் வன்னி மேற்கில் உள்ள பாலாவி, பேய்முனை, வலைப்பாடு ஆகிய பகுதிகள் படையினர் வசமாகின.
தரைவழிப்பாதை திறப்பிற்கான படைநடவடிக்கையில் படைத்தரப்பு ஏ32 வீதியின் 90 சதவீதமான பகுதியைக் கையகப்படுத்திய நிலையிலும் மிகுதி 10 சதவீதத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை முன்னரைப் போலவே மிக நெருக்கடி மிகுந்ததொன்றாகவே இருப்பதனை களமுனையில் ஏற்படும் இழப்புக்களிலிருந்து அறியமுடிகிறது. வன்னி மேற்கில் புலிகளின் இறுதி கடல் விநியோக ஓடத்துறையையும் படையினர் கைப்பற்றியதை அடுத்து பாக்கு நீரிணைக்கு இடையிலான கடற்புலிகளின் போக்குவரத்து தடைப்பட்டு விட்டது என்று சொல்லுவதே பொருத்தமானது. ஏனெனில், பூநகரிப் பிரதேசத்தில் புலிகளின் வசமுள்ள கடற்பிரதேசத்தைப் பயன்படுத்தி விநியோகங்களைச் செய்வது மிக ஆபத்தானது. எனவே, இப்பகுதியிலிருந்து கடற்புலிகள் பின்வாங்கியிருக்கிறார்கள்.
வன்னி மேற்கில் மன்னாரிலிருந்து ஏ32 வீதியூடாக பூநகரி நோக்கி முன்னேறிய படையினர் இப்பத்தி எழுதும்போது செம்மண்குண்டு வரை முன்னேறியிருந்தனர். பூநகரியை அடைவதற்கு (ஒல்லாந்தர் கோட்டையுள்ள வாடியடி) 6மைல் தூரமே இருந்தது. படையினர் பூநகரியை அடைந்தால் அதன்பின் அவர்கள் யாழ். குடாவினுள் பிரவேசிப்பதற்கு பூநகரி வீதியின் முடிவிடமான சங்குப்பிட்டி இறங்குதுறை வரை முன்னேற வேண்டும். இதற்கு அவர்கள் மேலும் ஏறக்குறைய 5 மைல் தூரம் முன்னேற வேண்டும்.
நாச்சிக்குடாப் பகுதியிலிருந்து பின்வாங்கிய விடுதலைப் புலிகள் தமது அடுத்த முன்னரங்கத்தை தற்போது செம்மண்குண்டுப் பகுதியில் நிறுவி இராணுவ நகர்வை தடுத்து நிறுத்த முயன்றனர். இம்முன்னரங்கப் பகுதியை படையினர் உடைத்துக் கொண்டு முன்னேறினால் அதற்கு அப்பால் இன்னுமொரு முன்னரங்கப் பகுதியை நிறுவுவதற்கு ஏதுவான புவியியல் சாதகத் தன்மை புலிகளுக்கு மிகக்குறைவே. காரணம் அதற்கு அப்பால் பூநகரிப் பிரதேசத்தின் கடற்கரை சமவெளிகளும், வயல்வெளிகளும் ஆரம்பித்துவிடும்.
அது மாத்திரமன்றி குறுகலான பிரதேசத்தினுள் இருந்து புலிகளால் சண்டையிட முடியாது. ஏனெனில், யாழ் குடாவிலிருந்தும் படையினர் பலமான எறிகணை வீச்சினை மேற்கொண்டு கிளாலி கேரைதீவுப் பகுதிகளிலிருந்து பூநகரி சங்குப்பிட்டி நோக்கி ஒரு தரையிறக்கத் தாக்குதலை மேற்கொள்வர். இது விடுதலைப்புலிகளுக்கு மிகப் பாதகமான சூழலையே ஏற்படுத்தும். இம்மாத இறுதிக்குள் பூநகரி வீதியை முழுமையாகக் கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கில் அரசு, படைத்தரப்பின் மீது கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகிக்கின்றது. என்னவிலை கொடுத்தாவது மாவீரர் நாளுக்கு முன்பாக பூநகரிப்பிரதேசம் முழுவதையும் கைப்பற்றி தென்னிலங்கையில் பெரும் வெற்றிச் செய்தியினை சிங்கள மக்களுக்கு வழங்க அரசு அவசரப்படுகிறது.
வன்னேரியிலிருந்து நேர் வடக்காக முன்னேறிய படையினர் பூநகரி பரந்தன் விதியில் உள்ள பூநகரி நல்லூருக்கும், குடமுருட்டி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் பூநகரி பரந்தன் வீதியைக் கைப்பற்றும் நோக்கில் காடுகளினூடான முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நடவடிக்கையில் படையினரின் இலக்கு பரந்தன் பூநகரி வீதியில் 8ஆவது மைல் கல்லுக்கும், 15ஆவது மைல்க்கல்லுக்கும் (நல்லூர் 15ஆவது மைல் கல்லில் ஆரம்பிக்கிறது) இடைப்பட்ட பகுதியே. இப்பகுதிக்கு ஊடுருவி வீதியைக் குறுக்கறுத்து பெட்டியடிப்பதன் மூலம் பூநகரிக்கான புலிகளின் தரைவழி வழங்கல் பாதையை முடக்கி பூநகரியை முற்றுகைக் குள்ளாக்குவதன் மூலம் பூநகரியிலிருந்து முற்று முழுதாக புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அடுத்து கடந்த வாரம் மாங்குளத்திற்கும் திருமுறிகண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியில் உள்ள மாங்குளம், பனிக்கன்குளம், கிழவன்குளம், பழையமுறிகண்டி, கொக்காவில், திருமுறிகண்டி, இரணைமடுச்சந்தி ஆகிய இடங்களை நோக்கி பல்முனை நகர்வுகளை படையினர் மேற்கொண்ட போதும் புலிகளின் கடும் எதிர்ப்பால் அந்நகர்வு முறியடிக்கப்பட்டிருக்கிறது. எனினும் கிழவன்குளத்தில் படையினர் ஏ9 விதியைத் தொடும் தூரத்திலேயே நிலைகொண்டிருப்பதாகவே களமுனைத் தகவல்களிலிருந்து அறியமுடிகிறது.
ஆகவே வன்னி மேற்கின் நிலை இவ்வாறிருக்க வன்னி கிழக்கில் கடந்த வாரம் தண்ணிமுறிப்புக் குளத்திற்கும், குமுழமுனைக்கும் இடைப்பட்ட பகுதியில் படையினர் ஒரு முன்னகர்வுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதன் விளைவாக குமுழமுனைக் கிராம எல்லை வரை படையினர் முன்னகர்ந்துள்ளனர். இதன் காரணமாக குமுழமுனை பிரதேச மக்கள் இடம்பெயர்ந்ததோடல்லாமல் படையினரின் கடுமையான எறிகணை வீச்சுக்களால் அளம்பில், செம்மலைப் பிரதேச மக்களும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு வன்னியின் தெற்குப் பகுதியில் ஏற்படுகின்ற சண்டைகள் வன்னியின் இருப்பைத் தீர்மானிக்கின்ற சக்தியாகவுள்ளது. எனவே கிழக்கு வன்னியின் இருப்பைத் தக்கவைக்க வேண்டுமானால் மணலாற்றுப் பிரதேசத்தினூடான படைநடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு உண்டு. எனவே படைத்தரப்பு முல்லைத்தீவு நகரின் தெற்கே 14 கிலோமீற்றர் தொலைவிலேயே நிற்பதாகக் கூறினாலும் இப்பகுதியினூடான முன்னேற்றம் இலகுவானதொன்றல்ல.
பொதுவாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதமென்பது படைகளை கடும் அச்சத்தில் கழித்த மாதங்களாகவே கடந்து செல்ல வைத்திருக்கின்றது. ஆனால் இவ்வருடம் அவ்வாறானதொரு நிலையில் பெரும்பாலான படையினர் இல்லை என்பது உண்மையே. ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக விடுதலைப் புலிகள் எந்தவிதமான ஒரு வலிந்த தாக்குதலையும் மேற்கொள்ளாமல் வெறும் தற்காப்புத் தாக்குதல்களையும், பின்வாங்கல்களையும் மேற்கொண்டு தொடர்ச்சியாக மௌனத்தைக் கடைப்பிடிப்பதனால் படையினர் மத்தியில் உளவுரண் சற்று அதிகரித்திருக்கின்றது.
இவ்வாறே தொடர்ச்சியான புலிகளின் மௌனம் படைகள் மத்தியில் புதுத் தென்பை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை புலிகள் பலமிழந்து வருகிறார்கள் என்ற தோற்றப்பாடு அரசாங்கத்தின் பரப்புரைகளினால் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் புலிகள் பற்றிய மதிப்பீடு மீளாய்வு செய்யப்பட வேண்டியதொன்று என்ற கருத்து ஏற்பட்டு வருவதை உணரமுடிகின்றது. அத்தாடு இந்நிலை உலகத் தமிழர் மனங்களிலும் மிகக்பெரும் சோகத்தையும், சலிப்புணர்வையும் ஏற்படுத்திவருவதனை மறுக்கமுடியாது.
ஆனால் புலிகளின் பலம் தாக்குதல் வியூகம் என்பவற்றினை இன்றுவரை யாரும் சரியாக கணிப்பிடவோ, அல்லது எதிர்வு கூறவோ முடியவில்லை என்பது தான் உண்மை. எனவே யாராலும் அனுமானிக்க முடியாத புரியாத புதிராகவே புலிகள் இயக்கம் என்றும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இவ்வாறு தந்திரோபாயமாகவும் இறுக்கமாகவும் கட்டி வளர்க்கப்பட்ட ஒரு விடுதலை இயக்கம் ஊதிய பலூன் போல் சடுதியாக வெடித்து அழிந்துவிடும் என்று கணிப்பது முட்டாள்தனமானது. புலிகள் இயக்கத்திற்கு எப்போதெல்லாம் பின்னடைவுகள் ஏற்படுகின்றதோ பின்னடைவுக்கு அப்பால் தன்னை ஒரு படி மேல் வளர்த்துக் கொண்டு முன்னோக்கிச் சென்றுள்ளது. அவ்வாறானதொரு நிலையே தற்போதும் ஏற்பட்டுள்ளதென்று சொல்வதே பொருந்தும்.
போரில் ஈடுபடுகின்ற இருதரப்பினரில் ஒருவர் மட்டும் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்துவிட முடியாது. இதற்கு புலிகளும் விதிவிலக்கல்ல. தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மௌனத்தைக் கலைத்து எப்போது வலிந்த தாக்குதலைப் புலிகள் மேற்கொள்கின்றனரோ அன்று மேற்குறிப்பிட்ட பல்வேறு தரப்பினரது கணிப்புக்களும் ஊகங்களும் பொய்த்துவிடும். அதுவரை இவ்வாறான பல்வேறுபட்ட யதார்த்தத்திற்குப் புறம்பான கருத்தாடல்கள் வெளிவருவது தவிர்க்க முடியாதனவே.
பூநகரி இழக்கப்பட்டால் அடுத்த இலக்கு கிளிநொச்சிதான். கிளிநொச்சியைப் படைகள் அடைந்தாலும் போர் என்பது குறுகிய காலத்தினுள் முடிவடைந்துவிடும் என்று கூறுவார்களேயானால் அதைவிட முட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியை வடக்கில் படையினர் கைப்பற்றுகின்றபோது கிழக்கில் இன்னொரு பகுதியில் புலிகள் நிலைகொள்வர். இது ஒரு தொடர்ச்சியான சுற்று வட்டத்தில் செல்வதற்கு வழிவகுக்குமேயன்றி போரின் முடிவை எட்டமுடியாது.
மாவீரர் நாள் நெருங்கிவரும் வேளையில் வழக்கமான புலிகளின் வலிந்த தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில் நவம்பர் 27 க்கு இடையில் ஏதாவது பெரும் தாக்குதலை புலிகள் நிகழ்த்துவர் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பெரும் தாக்குதல்கள் எதுவும் இல்லாது போனால் புலிகளின் தேசிய தலைவரின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை எவ்வாறு இருக்கப் போகின்றது என யாவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் இம்மாதத்தினுள் பெரும் வலிந்த தாக்குதல் எதுவும் நிகழ்வதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. எனினும் புலிகளின் தாக்குதல் பற்றிய எதிர்வு கூறல்களை செய்வது மிகச்சிரமமானதே.
Sunday, 16 November 2008 04:54 தராக்கிராம் சமகால அரசியல் யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதை ஒருசில தினங்களில் உத்தியோக பூர்வமாகத் திறந்துவிடப்படும் என்ற படைத்துறைப் பேச்சாளரின் கூற்றும், புலிகளை அழித்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தை என்ற அரசுத்தலைவரின் போக்கும், வட போர் அரங்கில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்றே கருத வைக்கின்றன.

Comments