கர்நாடக மாநிலத்தில் ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்: புலமைப்பித்தனும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பு



இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டத்தில் கவிஞர் புலமைப்பித்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பெங்களுர் தமிழ்ச் சங்கம் சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 நிமிடத்துக்கு திருவள்ளுவர் அரங்கில் இப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் "ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் தமிழக சட்ட சபை முன்னாள் துணைத் தலைவர் கவிஞர் புதுமைப்பித்தன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கமும் சிறீகாந்தாவும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகளால் அல்லற்பட்டு வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்திட திரண்டு வருமாறு தமிழ்ச் சங்க தலைவர் ப.சண்முகசுந்தரம் செயலாளர் கோ.தமோதரன் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.



Comments