கறுப்பினத்தைச் சார்ந்த பராக் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால் உலகெங்கும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு விடிவு ஏற்பட்டுள்ளது போன்றதொரு பரப்புரை மேலெழுந்துள்ளது.
ஒபாமாவைத் தெரிவு செய்த பெரும்பான்மையானோர், வெள்ளையின அமெரிக்கர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.அதலபாதாளத்தை நோக்கி கிடுகிடுவென வீழ்ச்சியுறும் அமெரிக்கப் பொருளாதாரமும் ஜோர்ஜ் புஷ்ஷின் ஆக்கிரமிப்பு போர் வெறிக் கொள்கையும் ஒபாமாவின் வெற்றிக்கு ஊக்கிகளாக விளங்கியதை புரிந்து கொள்ளலாம்.ஜனவரி 20ஆம் திகதி அதிபராகப் பதவியேற்கும் ஒபாமா, அடுத்துவரும் நான்கு ஆண்டு கால ஆட்சியில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் ஏராளம்.
முதலில் கனிமவளச் சுரண்டலிற்காக ஆபிரிக்காவில் பாரிய முதலீடுகளைக் குவிக்கும் சீனாவை எதிர்கொள்ள வேண்டும்.ஜோர்ஜியா, உக்ரேன் ஊடாக முன்னெடுக்கப்படும் ஐரோப்பிய விரிவாக்கத்திற்கு எதிராக புதிய பனிப்போரை ஆரம்பித்திருக்கும் ரஷ்யாவின் நகர்வுகளை முறியடிக்க வேண்டும்.ஆசியாவிற்கான தென்னாசிய கடல் வழிப் பாதையில், சீனாவின் கேந்திர மைய நிர்மாணிப்புகளுக்கு எதிரான, பிராந்திய சக்திகளின் கூட்டுக்களை வலுப்படுத்த வேண்டும்.ஆகவே தற்போது மேற்குலகின் பார்வையை திருப்பியிருக்கும் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் நிலைபற்றிப் பார்க்கலாம். சகல மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த நிலப் பரப்பின் அளவைக் கொண்டுள்ளது கொங்கோ குடியரசு.அகண்ட பிரதேசத்தில் ஒழுங்கான பாதைகள் கிடையாது.
அதனை மாற்றியமைத்து சகல வசதிகளும் கொண்ட புதிய தேசமொன்றை உருவாக்க, சீன தேசத்துடன் பாரிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தியுள்ளார் கொங்கோவின் அதிபர் ஜோசப் கபிலா.அரச கரும மொழியாக பிரெஞ்சைக் கொண்ட 58 மில்லியன் மக்கள் வாழும் கொங்கோவில் வைரம், எண்ணெய், கோபோல்ற் (இணிஞச்டூt) செம்பு போன்றவை அந்நிய செலவாணியை ஈட்டும் ஏற்றுமதிப் பொருட்களாகும்.உலக மக்களை கணப் பொழுதில் இணைக்கும் கைத்தொலைபேசியின் ஆதார சக்தி, இந் நாட்டிலிருந்து கிடைக்கும் கனிப் பொருள் ஒன்றிலிருந்தே உருவாகிறது.
கொலம்பைற் ரன்ரலைட் (இணிடூணிட்ஞடிtஞு கூச்ணtச்டூடிtஞு) என்கிற மூலக் கனிமத்திலிருந்து கோல்ரான் (இணிடூtச்ண) பெறப்படுகிறது.கைத்தொலைபேசி மின் கலத்தில், சக்தியைச் சேமிக்கும் வல்லமையையும் மின் அழுத்தத்தையும் சீராக்கும் பணியையும் இந்த "கோல்ரான்' (இணிடூtச்ண) செய்கிறது.உலக கைத்தொலைபேசி ஜாம்பவான்களான பன்னாட்டுக் கம்பனிகள் பலவற்றுக்கு கோல்ரான் என்கிற பண மீட்டும் அமுத சுரபியைத் தாங்கிக் கொண்டிருக்கும் கொங்கோ குடியரசு, எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நாடென்பதை சகல மகா ஜனங்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
இதனை உணர்ந்த சீனா, தனது பொருளாதார விரிவாக்க அகோரப் பசிக்குத் தேவையான மூலப் பொருட்கள் குவிந்துள்ள கொங்கோ தேசத்தை தேர்ந்தெடுத்தது. அரசிற்குச் சொந்தமான "ஜெகாமைன்ஸ்' (எஞுஞிச்ட்டிணஞுண்) என்ற செம்பு கொபொல்ட் சுரங்கக் கம்பனியை இயக்கி வரும் போல் போட்டின் (கச்தடூ ஊணிணூtச்டிண) என்பவர் ஊடாக தனது முதலீடுகளை கொங்கோவில் செய்ய சீனாவிற்கு இலகுவாக இருக்கிறது.
சீனப் பெரு முதலீடு குறித்து கொங்கோவின் சுரங்க கைத்தொழில் அமைச்சர் விக்டர் சசொன்கோ கூறுகையில்,"எமது வளங்கள் சட்டபூர்வமற்ற வகையில்சுரண்டப்பட்டு வெளியேறுவதைப் பார்க்கிறோம். பல ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியிலும் மிக மோசமான உள்நாட்டு யுத்தங்களாலும் இந்நாடு அழிவுற்ற நிலையிலுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.சீன அரச வங்கியின் நிதி முதலீட்டின் மூலம், இந்த கூட்டுப் பங்களிப்பினால் 42 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமாகப் பெறக் கூடிய வாய்ப்பு சீனாவிற்கு இருக்கிறது.
அதாவது ஒன்பது பில்லியன் டொலர் முதலீடு 42 பில்லியனாகப் பெருகும் நிகழ்வு கொங்கோவில் நடைபெறப் போகிறது.இங்கு 1998 இலிருந்து 2003 வரை நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம் "ஆபிரிக்காவின் உலக யுத்தம்' என கணிக்கப்பட்டது.தற்பொழுது கிழக்குப் பிராந்தியத்திலுள்ள "கோமா' (எணிட்ச்) நகரை சுற்றிவளைத்துள்ள கிளர்ச்சிக்குழுவின் தலைவர் லோறன்ட் நிகுன்டா (ஃச்தணூஞுணt Nடுதணஞீச்) ஏ.பி. செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயமொன்றையும் கவனிக்க வேண்டும்.
அதாவது சீனாவின் உள் நுழைவினை கொங்கோவினுள் அனுமதித்த 5 பில்லியன் டொலர் சீன ஒப்பந்தம் குறித்து தனது எதிர்ப்பினை அரசிற்கு தெரிவிக்க வேண்டுமென கிளர்ச்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.ஆகவே சீன ஒப்பந்தத்திற்கெதிரான கிளர்ச்சியாளர்களின் நிலைப்பாட்டில் எத்தகைய சக்திகள் பின்புலமாக நின்று தொழிற்படுகிறார்களென்பதை புரிதல் மிக எளிதானது.
வாழ்வின் கொடூரமான பக்கங்களை நிதமும் தரிசித்த வண்ணம், உள்ளக இடப்பெயர்விற்குள்ளாகும் 3 இலட்சம் வன்னி மக்களின் மீது அக்கறை கொள்ளாமல், கோமாவில் இடம்பெயரும் இரண்டரை இலட்சம் கொங்கோலிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்க விரைந்தோடிச் செல்லும் ஐரோப்பியத் தலைவர்களின் மனிதாபிமானம், கோல்ரான், மண்ணிலும் செப்புக் குவியலிலும் புதைந்திருப்பதை பன்னாட்டு ஏகாதிபத்தியக் கம்பனிகள் மனதாரப் புரிந்து கொள்ளும்.சந்தை விரிவாக்கமும், சிதறிக் கிடக்கும் மூல வளங்களை கையகப்படுத்தலுமே இனி உருவாகும் நவீன வல்லரசுகளின் பனிப் போரில் முக்கிய விவகாரங்களாக அமையப் போகிறது.ஆகவே ஆபிரிக்கா மீதான சீனாவின் மூலவளக் காதலை, அமெரிக்காவின் கறுப்பின அதிபர் பராக் ஒபாமா எவ்வாறு தோல்வியடையச் செய்வாரென்பதை பொறுத்திருந்து அவதானிக்க வேண்டும்.
ஒபாமாவின் கறுப்பு இன அடையாளம், அமெரிக்க ஆதிக்கத்துள் ஆபிரிக்காவை கொண்டுவர உதவுமென்று வெள்ளை மாளிகை கொள்கை வகுப்பாளர்கள் கருதக்கூடும்.அதேவேளை சந்தை வாய்ப்பு விலகிச் சென்று வேறொரு பிராந்திய வல்லரசின் பிடிக்குள் செல்லுவதை தவிர்ப்பதற்கு மனிதாபிமான ஜனநாயகப் போர்வைக்குள் யுத்தத்தை ஆரம்பிப்பதே அமெரிக்காவின் வழக்கமான பாணியென்பது உண்மை.வியட்னாம் தொடக்கம் ஈராக்வரை வரலாற்றில் பதியப்பட்ட அமெரிக்க யுத்தங்களின் பின்புலத்தில் பொருண்மிய, கேந்திர முக்கியத்துவங்களே துரத்திக் கொண்டு நிற்கின்றன.
சிகாகோ வெற்றி விழா மேடையில் புதிய அதிபர் ஒபாமா கூறிய அமெரிக்க மேலாண்மை குறித்த தற்பெருமைகள், உருவம் நிறம் மாறினாலும் ஏகாதிபத்திய உள்ளடக்கம் மாறுதலடையவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியது.கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்குலகின் மீதான பூரண ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா மேற்கொண்ட கடின உழைப்பினை ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.ஆனாலும் அமெரிக்காவிற்கு இணையாக வளர்ந்துவரும் சீனாவும் சீனõவிற்குப் போட்டியாக வளர முயற்சிக்கும் இந்தியாவுமே அமெரிக்காவின் கவனிப்பிற்குரிய நாடுகளாக இனி அமையப் போகின்றன.
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் வேகமான பொருளாதார முதலீட்டு ஊடுருவலை நிகழ்த்தும் சீனாவைக் கட்டுப்படுத்த கடல் வழிப் பாதையிலுள்ள இராணுவ கேந்திர மையங்களை தமது ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடலாம்.அதேவேளை இதற்கு மறுதலையான சிந்தனைப் போக்கினை மேற்கொள்ளவும் அமெரிக்கா முயற்சிக்கலாம்.அதாவது சீனாவுடனான உறவினை வலுப்படுத்தி வேறு சக்திகள் இடையில் புகாதவாறு தடுத்து தமக்கிடையே சந்தைகளைப் பங்கிட்டும் கொள்ளலாம்.
ஏனைய நாடுகளுடன் இராணுவ வயப்பட்ட முரண்பாடுகளைத் தவிர்த்து உள்நாட்டு விவகாரங்களில் உரசல் உருவாகாத வகையில் மென் போக்கினைக் கடைப்பிடித்து தனது பொருண்மிய உயர்விற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் சீனாவின் பாதையினை ஒபாமாவும் கடைப்பிடிக்கக்கூடும்.ஏனெனில் அமெரிக்கõவின் முதலாளித்துவ பொருளாதார நிலைமை, அவ்வளவிற்கு மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது.யுத்தங்கள் புரிந்து சந்தைகளை கையகப்படுத்தும் புஷ்ஷின் இராஜதந்திரம் தோல்வியுற்றதை ஒபõமாவும் உணர்ந்திருக்கிறார்.
ஆகவே பிராந்திய கேந்திர முக்கியத்துவமிக்க ஆப்கானிஸ்தானில் மட்டும் தமது புஜபலத்தை காட்டியவாறு, ஏனைய பிரதேசங்களில் பொருண்மிய உறவுகளை, சமரசத் தளத்தில் பேணலாம்.அதேவேளை ஒபõமாவூடாக ஜனநாயகக் கட்சியின் மீள் வருகை, இந்திய அரசிற்கு உடன்பாடான விவகாரமாகத் தெரியவில்லை.சீனாவிற்கெதிராக இந்தியாவை வளர்த்து உயர்த்த வேண்டுமென்கிற ஜோர்ஜ் புஷ்ஷின் பிராந்திய தந்திரோபாயத்தை ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர் கடைப்பிடிக்க மாட்டார்களென்கிற அச்சம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்டு. அதாவது பில் கிளிண்டனின் ஆட்சியில் பங்குபற்றிய பல உயர் நிலைஅதிகாரிகள் இந்தியாவிற்கு சார்பானவர்கள் அல்லர் என்கிற விடயம் குறிப்பிடத்தக்கது.
கிளிண்டனின் செல்வாக்கான இராஜ தந்திரிகள், ஒபாமாவின் ஆட்சியதிகாரத்தில் நிச்சயம் பங்கு வகிக்கப் போகிறார்கள்.ஆகவே அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பில் கிளிண்டன் தம்பதியினரின் அறிவுரைகள் முதன்மையுறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமென்று நம்பலாம்.ஆதலால் அமெரிக்க சீன இந்திய உறவுகளில் ஏற்படப் போகும் மாறுதல்கள், இலங்கையிலும் இயல்பான தாக்கங்களை ஏற்படுத்தும்.அதேவேளை ஒபாமா ஆட்சி நாற்காலியில் அமரும் முன்பாக புஷ்ஷின் கொள்கையை நிறைவேற்றி விட வேண்டுமென இந்தியாவும் இலங்கையும்அவசரப்படலாம்.
இலங்கை அரசாங்கத்தின் தீவிரப் போர் முயற்சியும் இதனையே வெளிப்படுத்துகிறது. தமிழ் நாட்டின் அழுத்தங்களை புறந்தள்ளியவாறு இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நகர்விற்கு முழுமையான ஆதரவு வழங்கும் இந்திய நிலைப்பாடு ஒரே விடயத்தைத்தான் கூறுகிறது.
வெனிஸுலாவைத் தனிமைப்படுத்தி உலகின் ஐந்தாவது பாரிய பொருளாதார நாடான பிரேசிஸிலுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவைப் புறந்தள்ள சீனாவுடனும் இணைவினை ஏற்படுத்தலாம். அதேபோன்று விடுதலைப் புலிகளின் இராஜதந்திரத்தைப் புரிந்து கொள்ள நிகழ்கால உலக அரசியல் மாற்றங்களை தெரிந்து கொள்ளல் வேண்டும்.
சி.இதயச்சந்திரன்

Comments